இனவாத அரசாங்கம் ஒருபோதும் வெற்றியளிக்காது – லக்ஸ்மன் கிரியல்ல

 Unknown தமிழ் பேசும் மக்­க­ளையும் ஒன்­றி­ணைத்து பய­ணித்தால் மட்­டுமே ஐக்­கிய இலங்­கையை கட்­டி­யெ­ழுப்ப முடியும். இன­வாத அர­சாங்கம் ஒரு­போதும் வெற்­றி­ய­ளிக்­காது. அதை நாம் தெளி­வாக விளங்­கி­யுள்ளோம் என அமைச்சர் லக் ஷ்மன் கிரி­யெல்ல தெரி­வித்தார்.

 

சர்­வ­தேசம் இன்று இலங்­கையை நட்பு நாடாக கரு­தவும் இதுவே காரணம் எனவும் அவர் சுட்­டிக்­காட்­டினார். நேற்று கொழும்பில் இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

மேலும் அவர் தெரி­விக்­கையில்,

இத்­தனை காலமும் ஆட்சி செய்த இன­வாத அர­சாங்கம் மாற்­றப்­பட்டு இப்­போது ஜன­நா­யக அர­சாங்கம் அமை­யப்­பெற்­றுள்­ளது. சிங்­கள மக்­களின் உரி­மை­களை பாது­காப்­பதைப் போல் தமிழ்இ முஸ்லிம் மக்­களின் உரி­மை­க­ளையும் பாது­காப்­பதில் நாம் அதிக முக்­கி­யத்­துவம் கொடுக்­கின்றோம்.

நாட்டில் 31 சத­வீ­த­மான சிறு­பான்மை மக்கள் வாழ்­கின்­றனர். அவர்­களை பாது­காத்தால் மட்டுமே ஒன்­று­பட்ட ஐக்­கிய இலங்­கையை கட்­டி­யெ­ழுப்ப முடியும். அதை நாம் மிகத் தெளி­வாக விளங்­கிக்­கொண்­டுள்ளோம். ஐக்­கிய தேசிய கட்சி எப்­போதும் ஜன­நாய ஆட்­சியை விரும்பும் கட்சி என்ற வகையில் நாம் மூவின மக்­களின் ஒன்­று­பட்ட அர­சாங்­கத்தை எதிர்­பார்க்­கின்றோம்.

அதற்­கா­கவே எமது ஆட்­சியில் தமிழ், முஸ்லிம் மக்­களின் எதிர்­பார்ப்பை பூர்த்திசெய்யும் வகையில் வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­துள்ளோம். வடக்கில் தமிழ் மக்­களின் காணி­களை அவர்­க­ளிடம் ஒப்­ப­டைத்­துள்ளோம். அதேபோல் கிழக்­கிலும் முஸ்லிம் மக்­க­ளுக்­கான இடங்­களை அவர்­க­ளிடம் கைய­ளித்­துளோம்.

மேலும் பெருந்­தோட்டத் துறை­யிலும் அதி­க­ளவில் சிறு­பான்மை மக்­களே ஈடு­ப­டு­கின்­றனர். இத்­தனை காலமும் முன்­னைய அர­சாங்கம் பெருந்­தோட்டத் துறையில் அதிக அக்­கறை காட்­ட­வில்லை. முன்னைய அர­சாங்­கத்­தினால் தமது காலத்தில் மொத்­த­மாக 8.1 மில்­லியன் ரூபாய்கள் ஒதுக்­கீடு மட்­டுமே செய்­து­கொ­டுக்­கப்­பட்­டது. ஆனால் நாம் கடந்த மூன்று மாத காலத்தில் 600 மில்­லியன் ரூபாய் நிதியை நிவா­ர­ண­மாக ஒதுக்­கி­யுள்ளோம். தேயிலை தோட்டத் தொழி­லாளர் மற்றும் இறப்பர் தொழி­லா­ளர்­க­ளுக்­கான நிவா­ர­ண ஒதுக்­கீட்டில் இதுவே கூடிய தொகை.

அதேபோல் இன்று சர்­வ­தேசம் இலங்­கை­யுடன் நல்ல உற­வினை பேணு­கின்­றது. அதற்கு எமது அர­சாங்­கத்தின் நட­வ­டிக்­கை­களே காரணம். சிறு­பான்மை மக்­களின் உரி­மை­களை பாது­காத்து தமிழ் சிங்­கள முஸ்லிம் மக்­களின் உரி­மை­களை நாம் கட்டிக் காத்­துள்ளோம். மஹிந்த அர­சாங்­கத்தில் செய்த அனைத்து தவ­று­களும் இன்று எமது அர­சாங்­கத்­தினால் நிவர்த்­தி­செய்­யப்­பட்­டுள்­ளது. குறிப்­பாக 19ஆவது திருத்தச் சட்டம் நிறை­வேற்­றப்­பட்­டமை மற்றும் சுயா­தீன சேவைகள் நிலை­நாட்­டப்­பட்­டமை என்­பன ஜன­நா­ய­கத்­திற்­கான நல்­ல­தொரு ஆரம்பம். அதை நாம் வெற்­றி­க­ர­மாக முடித்­துள்ளோம்.

இவையே சர்­வ­தேசம் எம்மை நட்பு நாடாக்­கி­கொள்ள முயற்­சிப்­ப­தற்­கான காரணம். அதேபோல் அமெ­ரிக்க இரா­ஜாங்க செய­லாளர் ஜோன் கெரியின் இலங்கை விஜ­யமும் அர­சி­ய­லுக்கு அப்­பா­லான பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­க­ளையும் பலப்­ப­டுத்தி உள்­ளது. இத்­தனை காலமும் இலங்­கைக்கு சர­்வதேசம் கடன் உத­விகள் மட்­டுமே வழங்­கி­யது. ஆனால் இப்­போது சர்­வ­தேசம் நிவா­ரண உத­வி­க­ளையே வழங்­கு­கின்­றது. இலங்­கையை கடன்­பட்ட நாடு என்ற பட்­டி­யலில் இருந்து மாற்­றி­ய­மைத்­துள்ளோம். ஐக்­கிய தேசியக் கட்சி மற்றும் ஜனாதிபதி ஆகியோரின் கூட்டு முயற்சியே இதற்குக் காரணம்.

எனவே பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் அமையும். அதிலும் சிறு பான்மை மக்களை ஒன்றிணைத்து தேசிய பாதுகாப்பையும் ஒற்றுமையையும் பலப்ப டுத்தும் ஆட்சியை நாம் முன்னெடுத்துச் செல்வோம் எனக் குறிப்பிட்டார்.