லண்டனில் இருந்த ரஷ்யா உளவாளியை கொல்ல உத்தரவிட்டாரா விளாடிமிர் புதின் ?

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவின் அடிப்படையிலேயே ரஷ்ய முன்னாள் உளவாளி அலெக்ஸாண்டர் லிட்வினங்கோ கொல்லப்பட்டிருக்கலாம் என்று இங்கிலாந்து அரசின் விசாரணை அறிக்கை தெரிவித்துள்ளது.

55a13987-445d-43d7-90aa-1576ac1d2f65_S_secvpf

அலெக்ஸாண்டர் லிட்வினங்கோ ரஷியாவின் மத்திய பாதுகாப்பு சேவையில் (FSB)  பணியாற்றியவர். பின்னர் அதில் இருந்து வெளியேறி லண்டனில் தஞ்சம் அடைந்தார். லண்டனில் இருந்தபடி அலெக்ஸாண்டர் லிட்வினங்கோ ரஷ்யாவையும் புதினையும் மிகக் கடுமையான விமர்சனத்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 2006-ம் ஆண்டு லண்டனில் தேனீரில் பொலோனியம்- 210 என்ற விஷம் கலந்து கொடுக்கப்பட்டு லிட்வினங்கோ கொல்ப்பட்டார்.

மரணப் படுக்கையில் இருந்த அலெக்ஸாண்டர் லிட்வினங்கோ தன்னை கொல்ல ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டதாக தெரிவித்தார். இந்த கொலை தொடர்பாக பல ஆண்டுகளாக நடந்துவந்த விசாரணையின் இறுதி அறிக்கை இன்று லண்டனில் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் அலெக்ஸாண்டர் லிட்வினங்கோ கொலையில் ரஷ்ய அரசு நேரடியாக சம்பந்தப்பட்டிருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமரின் செய்தி தொடர்பாளார் இந்த பிரச்சனையை இங்கிலாந்து தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்று வெளியான விசாரணை அறிக்கையை ரஷ்யா ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.