உலகில் வாழ்வதற்குரிய சிறந்த நாடுகளில் ஜெர்மனிக்கு முதல் இடம் , இந்தியாவிற்கு 22-வது இடம் !

உலகில் வாழ்வதற்குரிய சிறந்த நாடு பட்டியலில் ஜெர்மனி முதல் இடம் பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவிற்கு 22-வது இடம் கிடைத்துள்ளது.

உலகில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் எவை என்ற பட்டியல் சுவிச்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டு கூட்டத்தில் வெளியிடப்பட்டது. உலகின் 60 நாடுகளின் கலாசாரம், தொழில், பாரம்பரியம், வர்த்தகம், வாழ்கை தரம் போன்ற 24 வகை தகுதிகளின் அடிப்படையில் ஆய்வு செய்து இந்தப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

german prime minister

இந்த பட்டியலில் ஒட்டு மொத்த மதிபெண் அடிப்படையில் ஜெர்மனி முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவதாக கனடாவும் மூன்றாவதாக இங்கிலாந்தும் உள்ளன.  அமெரிக்கா இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. சுவீடன், ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க் ஆகியன அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

இந்தப் பட்டியலில் இந்தியா 22 வது இடத்தை பிடித்து உள்ளது.