பி.எம்.எம்.ஏ.காதர்
தமிழர்களாகிய நாங்கள் இந்த நாட்டிலே சுதந்திரமாகவும்,சமத்துவமாகவும் வாழ விரும்புகின்றோம் அந்த நீதி நியாங்களை இந்த அரசாங்கமும்,நாட்டில் இருக்கின்ற தலைவர்களும் சமத்துவமாகத் தருவார்களானால் எத்தப் பேச்சுக்கும் இடமில்லை நாங்கள் சமத்துவமாக வாழ முடியும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்,கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் அம்பாறை மாவட்ட பிரதிநிதியுமான தவராசா கலையரசன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டுப் பேரவை நடாத்திய’இனிய உறவுக்குள் இனிப்பான பொங்கல்; விழா-2016’ஞாயிற்றுக்கிழமை மாலை (17-01-2016)கல்முனை ஆர்.கே.எம்.பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது இதில் பிரதம அதிதியாக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பேரவையின் நிறுவனரும,; தலைவருமான தேசமான்ய ஜலீல் ஜீ தலைமையில் நடை பெற்ற இந்த விழாவில் கௌரவ அதிதியாக கல்முனை மாநகர சபையின் எதிர்க் கட்சித் தலைவர் குஞ்சுத் தம்பி ஏகாம்பரம் கலந்து கொண்டார்.இங்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் மேலும் உரையாற்றகையில் தெரிவித்ததாவது:-
1956ஆம் ஆண்டுகாலப்பகுதியில் இந்த நாட்டிலே தனிச்சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்டது அவ்வாறான சட்டம் கொண்டு வரப்பட்டபோது எங்களுடைய தமிழ்; தலைமைகள் அதனை எதிர்த்ததன் காரணமாகத்தான் இன்று இந்த நாட்டிலே தமிழுக்கு சமத்துவம் கொண்டுவரப்பட்டிருக்கின்றது என்ற உண்மையை நாங்கள் அறிந்திருக்க வேண்டும்.
இந்த மண்ணிலே இலங்கை திருநாட்டிலே தமிழும் தமிழினமும் வாழ வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்துப் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன உங்களைப் போன்ற எழுத்தாளர்கள் கடந்த காலங்களிலே இந்த நாட்டிலே நடந்த கொடுமைகளை வெளிக்காட்டியவர் கூட இன்று உயிரோடு இல்லாத நிலைமையை எல்லோரும் அறிவோம் அதே போன்று பல அரசியல் வாதிகள் கூட அழிக்கப்பட்டிருக்கின்றார்கள் இதுதான் இந்த நாட்டில் நடக்கின்ற நிலைமை
தமிழ்த் தலைவர்கள் எந்த இடத்திலாவது தமிழர்கள் என்று பேசியது கிடையாது தமிழ் பேசும் இனம் என்றுதான் உச்சரிப்பார்கள் இதன் பின்னணி என்ன நான் குறுகிய காலத்திற்குள் உருவாகிய அரசியல் வாதியாக இருந்தன் காரணமாக பல கசப்பான சம்பவங்களை அனுபவித்திருக்கின்றேன்.குறிப்பாக நான் ஒரு தமிழன் என்ற ஒரு காரணத்திற்காகத்தான்.
ஏன் நாங்கள் பிரச்சினைகளைப் பேசவில்லை இந்தப் பிரச்சினைகளை ஏற்படுத்தியவர்கள் யார் இந்த நாட்டில் தமிழர் என்ற உச்சரிப்பதற்கு காரணமாக இருந்தவர்கள் பேரினவாத சக்திகள் இந்த பேரினவாத சக்திகளால் எங்களுக்கு மொழி ரீதியாக,கலாசார ரீதியாக மற்றும் ஏனைய விடயங்களில் கூட சமத்துவம் வழங்கப்படவில்லை.நாங்கள் புறக்கணிக்கப்பட்டதன் காரணமானத்தான் நாங்கள் இந்த நாட்டிலே தனித்துவமாக இயங்குவதற்கு வழி தேடினோமே தவிர வேறு எந்;தக் காரணத்திற்காவுமல்ல.
இந்த நாட்டிலே தமிழர்கள் வாழ்ந்த பல பிரதேசங்கள் இன்று சுடுகாடாய்மாறியிருக்கின்றது அம்பாறை மாவட்டத்தில் பல இடங்கள் காணப்படுகின்றன அதற்காகத்தான் நாங்கள் தமிழ் பேசும் இனம் என்கின்ற அடிப்படையிலே சமத்துவத்தை நிலை நாட்ட உழைத்துக் கொண்டிருக்கின்றோம்.
நாங்கள் தமிழர்களாக,முஸ்லிம்களாக,சிங்களவர்களாக பிரிந்த வாழ முடியாது என்பதை இன்றைய கவியரங்கிலே தமிழ்,முஸ்லிம் கவிஞர்கள் கவிதைகள் மூலம் சுட்டிக்காட்டியமை சமத்துவத்தின் வெளிப்பாடாக இருந்தது.
இன்றைய இந்த பொங்கல்; விழாவானது இன ஐக்கியத்தை நோக்காகக் கொண்டு நடாத்தப்படுகின்ற விழாவாக அமைகின்றது.இந்த அம்பாறை மாவட்ட தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டு பேரவை இந்த எழத்தாளர்கள் ஊடாக தமிழ்,முஸ்லிம் சமூகங்கள் இரண்டையும் இணைத்து எதிர்காலத்தில் ஒரு சிறப்புமிக்க சமூகங்களாக வாழ்வதற்கு இவ்வாறான விழாக்கள் மன மகிழ்ச்சியைத் தருகின்றது.
பொங்கல் விழாவானது இன்று மட்டுமல்ல சங்ககாலம் தொட்டு தமிழர்கள் சூரியனுக்கு நன்றி செலுத்துகின்ற ஒரு விழாவாக, தமிழர்களின் பண்பாட்டை பிரதிபலிக்கின்ற ஒரு நிகழ்வாக இந்த நிகழ்வு தொன்று தொட்டு தமிழ் மக்கள் மத்தியிலே இடம் பெற்று வருகின்றது. ஆகவே இந்த புதுப் பொங்கலோடு வடக்கு கிழக்கு பிரதேசங்களிலே வாழுகின்ற தமிழ்,முஸ்லிம் சிங்கள மக்களின் சமத்துவம் சமமாக பங்களிக்கப்படுகின்ற போது நாங்கள் நிலையான சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என்றார்.
இந்த நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்;ட விரிவுரையாளர் கலாநிதி அனுஷியா சேனாதிராஜா தைப்பொங்கல் பற்றி சிறப்புரையாற்றினார்;. ஆர்.கே.எம்.பாடசாலையின் அதிபர் திருமதி விஜேய சாந்தி நந்தகோபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.