மீரா
கிழக்கு மாகாண சபையின் ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ தலைமையில் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை 24-01-2016ல் அம்பாறை டி .எஸ் .சேனநாயக்கா மஹா வித்தியாலயத்தில் காலை 9.00மணி தொடக்கம் மலை 3.00 மணி வரை அம்பாறை மாவட்டத்துக்கான ஆளுநர் நடமாடும் சேவை நடை பெறவுள்ளது.இதன் போது மாகாண அமைச்சர்களும் ,மத்திய அரசின் அரசியல் பிரமுகர்களும் வருகை தந்து அம்பாறை மாவட்டத்தில் இதுவரை காலமும் தீர்க்கப் படாத பொது மக்களின் பிரச்சினைகளுக்குத தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கவுள்ளனர்.
இந்த நடமாடும் சேவையின் போது காணிப் பிரச்சினைகள் ,நீர்ப்பாசனப் பிரச்சினைகள் ,யானையினால் ஏற்படும் அழிவுகள் ,ஆசிரியர்களின் இடமாற்றப் பிரச்சினைகள் ,வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினைகள் ,தொண்டர் ஆசிரியர்களின் பிரச்சினைகள் ,கிழக்கு மாகாணத்துக்கு வெளியே மிக நீண்ட காலமாக பணியாற்றும் அரச திணைக்கள ஊழியர்களின் சொந்த மாகாணம்,மாவட்டம் என்பற்றில் இணைந்து கொள்வதற்கான வாய்ப்புக்கள் ,வைத்தியசாலைகளில் பணியாற்றும் சிற்றூழியர்களின் பிரச்சினைகள் ,மேய்ச்சல் தரை பிரச்சினைகள் ,கால்நடைப் பண்ணையாளர்களின் பிரச்சினைகள் ,வீதி புனரமைப்பு ,மின்சார விநியோகம் ,இயற்கை அனர்த்த நிவாரணம் ,சுற்றாடல் பிரச்சினைகள் மீனவர் ,நன்நீர் மீன்பிடியாளர்கள் ,ஆழ கடல் மீனவாகள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் ,கல்விக் கூடங்கள் ,அதிபர்கள் பிரச்சினைகள் மாகாண சபை நிருவா கத்துக்குள் உள்ள அலுவலகங்களில் சமயா சபய அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்களின் எனப் பல்வேறு பட்ட பிரச்சினைகளுக்கு ஆளுநரின் முயற்சியினால் ,அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தீர்வுகள் எட்டப் படவுள்ளன.
இந்த நல்ல சந்தர்ப்பத்தை உரியமுறையில் பயன்படுத்திக் கொள்ள அம்பாறை மாவட்டத்தில் உள்ள அனைத்து இன மக்களும் ஆர்வம்கட்டுமாறு மாகாண சபையின் மக்கள் பிரதிநிதிகள் ஊடகங்கள் மூலம் வெளிப் படுத்தி உள்ளனர்.