கிழக்கு மாகாண பாடசாலைகளில் ஆசிரியர்களுக்கான பாரிய பற்றாக்குறை இருந்தும் கல்வி அதிகாரிகளுடைய எந்த ஆலோசனையும் பெறாது தான் விரும்பிய வாறு படிவம் தயாரித்து மத்திய அரசின் கல்விச்செயலாளருக்கு அனுப்பியிருப்பதானது கிழக்கு மாகாண அரசியல்வாதிகளையும் கிழக்கு மாகாண ஆசிரியர்களையும் வேதனைக் குள்ளாக்கியுள்ளதாக முதலமைச்சர் தெவித்தார்.
இந்நிலமையில் இன்று 07 பத்தரமுல்லையில் ஆசிரியர் நியமனங்கள் பெறும் அனைத்து ஆசிரியர்களுக்கும் அவர்களின் மாவட்டங்களின் ஆரியர் பற்றாக்குறையுள்ள பாடசாலைகளுக்கு நியமனங்களை மாற்றி வழங்கும் ஏற்பாட்டினை உடனே அமுலுக்கு வரும் வகையில் செய்து கொடுக்க வேண்டியது கல்வி அமைச்சின் பொறுப்பாக இருகிறது.
இது இவ்வாறிருக்க கிழக்கில் மக்களுக்கான ஆட்சியினை சரியாக செயற்படுத்தி ஒற்றுமையுடன் கொண்டு செல்லும் இவ்வேளையில் யாரிடமும் ஆலோசனை பெறாது தன்னிச்சையாக குழப்பத்தை ஏற்படுத்தும் முடிவுகளை எடுக்கும் எந்த அரச நிருவாக அதிகாரிகளானாலும் அம்மைச்சின் செயலாளர்களானாலும் அவர்களை உடனடியாக இடமாற்றுவது இன்றைய காலத்தின் கட்டாயத் தேவையாகும்.