பௌத்த மதகுருமார்கள் குறித்த பாராளுமன்ற சட்ட மூலத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு !

பௌத்த மதகுருமார்கள் குறித்து பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள சட்ட மூலத்திற்கு எதிராக பிவித்துரு ஹெல உறுமய இன்று உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்செய்துள்ளது. குறிப்பிட்டமனுவை தாக்கல்செய்த பின்னர் செய்தியாளர்களிற்கு கருத்துதெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில குறிப்பிட்ட சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் கொண்டுவர அரசு நினைத்தால் அது முதலில் இதுகுறித்த சர்வஜனவாக்கெடுப்பை நடத்தவேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார்.மகாசங்க குறித்து புத்தரால் மாத்திரமேவிதிகளை வகுக்கமுடியும்,பிழையான வழியில் நடக்கும், பௌத்தமதகுருமாரிற்கு எதிராக மகாநாயக்க தேரர்கள் மாத்திரம் நடவடிக்கை எடுக்கமுடியும் என குறிப்பிட்டுள்ளார்.

uthaya
பௌத்தமதகுருவொரின் காவியுடை அகற்றப்பட்டால்,அதன் பின்னர் சாதாரணசட்டங்களை அவர்களிற்கு எதிராக பிரயோகிக்கலாம், மகாநாயக்க தேரர்களிற்கு பொலிஸ்அதிகாரங்களை வழங்குவதை நாங்கள் எதிர்க்கின்றோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.