மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீடடுக்கு இங்கிலாந்தில் சத்திரசிகிச்சை நடக்கிறது.
மாலைத்தீவ் முன்னாள் அதிபர் மொஹமட் நஷீட் கடந்த 2008 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல் மூலம் ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபராவார்.
தீவிரவாத வழக்கில் இவருக்கு 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது தற்போது இவர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.
தற்போது கடும் முதுகுவலியால் அவதிப்படும் அவருக்கு தண்டு வடத்தில் சத்திரசிகிச்சை நடத்தப்பட உள்ளது அதற்காக இங்கிலாந்தில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற முடிவு செய்து அரசிடம் அனுமதி கேட்டார்.
அதற்கு மாலைத்தீவு அரசு அனுமதி மறுத்து விட்டது. தலைநகர் மாலேலில் உள்ள ஏ.டி.கே. தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நடத்த அனுமதி அளித்தது.
பல மாதங்கள் கழிந்த நிலையில் திடீரென இங்கிலாந்து சென்று சத்திரசிகிச்சை செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.
சமீபத்தில் மாலைத்தீவு சென்ற மத்திய வெளியுறவுத் துறை செயலாளர் எஸ்.ஜெய் சங்கர் இந்த விவகாரம் குறித்து மாலைத்தீவு அரசுடன் பேச்சு நடத்தினார். அதை தொடர்ந்து நஷீட் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.