வறிய மக்களுக்கு 5 வருடத்திற்குள் வீடு, காணி, தொழில் பெற்றுத் தருவேன்: சஜித் பிரேமதாச

 

12_Fotor

 

அஷ்ரப் ஏ சமத் – ஹம்பாாந்தோட்டையில் இருந்து

ஹம்பாந்தோட்டை கடலோரப் பகுதிகளில் வாழ்ந்து சுனாமியினால் பாதிக்கப்பட்டு
சுனாமி வீடமைப்புத்திட்டங்களில் வாழும் சில முஸ்லீம் குடும்பங்கள் இதுவரை
வீடோ காணியோ வழங்கப்படவில்லையென முறையிட்டனா்.  அவா்கள் வாழும்
பிரதேசத்திற்கு நேரடியாகச் சென்ற அமைச்சா் சஜித் பிரேமதாச அவா்களது
பிரச்சினைகளை கேட்டறிந்தாா். அத்துடன் வீடு காணிகள் பெற்றுக்
கொள்ளாதவா்களுக்கு 10 பேர்ச் காணியும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி
அதிகார சபையினால் 2லச்சத்தி 50 ஆயிரம் ருபாவில் நிர்மாணித்துக்
கொடுக்கப்படும்  வீடமைப்புத் திட்டங்களில் இவா்களுக்கும் வீடுகளை
நிர்மாணித்துக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை வேண்டிக்
கொண்டாா். அத்துடன் கடந்த பாராளுமன்றத் தோ்தலின் போது ஹம்பாந்தோட்டை வாழ்
முஸ்லீம்கள் தமக்கு வாக்களித்திருந்தமையிட்டும் அம்மக்களுக்கு நன்றி
தெரவித்தாா்.

8_Fotor

 

கடந்த மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் முஸ்லீம்களுக்கு மதரீதியான
குழப்பங்களை விளைவித்ததை ஞாபகப்படுத்தினாா். இந்த ஆட்சியில் அவ்வாறனாதொரு
பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும் அமைச்சா் சஜித்
பிரேமதாச தெரிவித்தாா்.  இந்தஆட்சியில் தான சிறுபான்மை முஸ்லீம் தமிழ்
மலையக மக்கள் பேகா், மலாயா் வாக்களித்துள்ளதாகவும் தெரிவித்தாா்.
ஹம்பாந்தோட்டையில் வாழ் மக்கள் வீடுகள் காணிகள் இல்லாமல் தமது
பெற்றோா்கள் வீடுகளில் வாழும் வறிய மக்களுக்கு இந்த 5 வருடத்திற்குள்
சகலருக்கும் வீடு காணி தொழில் பெற்றுத் தருவேன் எனவும் அமைச்சா் சஜித்
வாக்குறுதியளித்தாா்.

1_Fotor

இந்த ஆட்சியில் எதிா்கட்சியில் ஒரு குழு  மீண்டும் விடுதலைப்புலிகளை
கொண்டுவருகின்றது. பொளத்த நாட்டுக்கு எதிராக அரசியலமைப்பு மாற்றுகின்றது.
என கோசம் எழுப்புகின்றனா்.  விடுதலைப்புலிகளினால் எனது தந்தை ஆர்
பிரேமதாசாவினை இழந்தேன. நான் முதலில் விடுதலைப்புலிகள் மீண்டும்
வருவதற்கு எதிா்ப்பு தெரிவிப்பேன். அவ்வாறு இங்கு மீண்டும்
விடுதலைப்புலிகள் தலைதுாக்க இடமில்லை.

4_Fotor