உலகம் முழுவதும் பரவலாக அறியப்படும் அமெரிக்க டாலர் பணத்தாள்களில் அமெரிக்க அரசியல் சாசனத்துக்கு எதிராக உள்ள ‘கடவுள் மீது நம்பிக்கையாக’ என்ற வாசகத்தை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஸ்கார்மெண்டோ பகுதியில் வசிக்கும் மருத்துவம் மற்றும் வழக்கறிஞர் தொழில் செய்து வரும் மைக்கேல் நியூடவ் உள்ளிட்ட பலர் நீதிமன்றத்தில் தங்கள் மனுவை தாக்கல் செய்துள்ளனர். அமெரிக்க டாலர் பணத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள ‘கடவுள் மீது நம்பிக்கையாக’ என்ற வாக்கியம் கடந்த 1993-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட மத சுதந்திர சட்டத்துக்கு எதிராக உள்ளது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
112 பக்கங்கள் கொண்ட அந்த மனுவில் 100க்கும் அதிகமான முறை கடவுள் (God) என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. எனினும் ஒவ்வொரு முறையும் அவர்கள் அதை ‘G-d’ என்றே குறிப்பிட்டுள்ளனர்.
இதேபோல், மைக்கேல் என்பவரால் கடந்த 2010-ம் ஆண்டு கலிபோர்னியாவில் உள்ள நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டு அது நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.