ஜீஎஸ்பி பிளஸ் வரிச் சலுகையை இலங்கை மீண்டும் பெற்றுக் கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குவதாக பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் ஹியுகோ ஸ்வயர் தெரிவித்துள்ளார்.
அதனை பெற்றுக் கொள்வதற்கு இலங்கை இன்றும் ஒன்று அல்லது இரண்டு தேவைகளை நிறைவேற்ற வேண்டி உள்ளதாக நேற்று கொழும்பில் இடம்பெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு அவர் கூறியுள்ளார்.
நாட்டில் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஏற்படுவதற்கு பிரித்தானியா 6.6 மில்லியன் பவுன்கள் உதவியாக வழங்கும் என்று கூறியுள்ளார்.
அத்துடன் முதலீடுகளில் நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கான இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக செயற்படுவதற்கு விஷேட பயிற்சி வழங்கல் உட்பட்ட உதவிகளை வழங்குவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.