எல்லைகள் நிர்ணயிக்கப்பட்ட முறையில் உள்ள சிக்கல்கள் தொடர்பான கலந்துரையாடல்!

ஏ.எஸ்.எம்.தாணீஸ்

 

உள்ளுராட்சி மன்றங்களுக்கான புதிய தொகுதிவாரி,விகிதாசார கலப்பு தேர்தல் முறையில் புதிதாக வர்த்தமானியிடப்பட்டு எல்லைகள் நிர்னயிக்கப்பட்ட முறையில் உள்ள சிக்கல்கள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று (13) நடைபெற்றது.

 

முன்னால் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.தௌபீக் தலைமையில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் திருமலை மாவட்ட கட்சிக் காரியாலயத்தில இக் கலந்துரையாடல்  நடைபெற்றது.

 

திருகோணமலை மாவட்டத்தில் குறிப்பாக தமிழ்,முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் இடங்களில் மக்கள் தொகைக்கு ஏற்ப எல்லை நிர்னயம் செய்யப்படவில்லை பிரதிநிதித்துவம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டும் வைக்கப்பட்டுள்ளன.அதேவேளை குறைந்த மக்கள்தொகைக்கு பெரும்பான்மை சமூகத்தினர் வாழும் இடங்களில் அதிகமான மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படும் வகையில் எல்லைகள் நிர்னயம் செய்யப்பட்டுள்ளன.

வர்த்தமானியிடப்பட்ட உத்தேச எல்லை நிர்னயத்தை பார்க்கின்றபொழுது

,y cs;Suhl;rp gpupT fpuh.cj;.gpupT thf;Ffs; jw;Nghja cWg;gpdh; Gjpa Njh;jy; rigf;fhd cWg;gpdh;fs;
01 jpUkiy efurig   31927 12 18
02 fpz;zpah efu rig 17 21069 07 10
03 nkhuntt gp.rig 10 8659 09 13
04 jk;gyfkk; gp.rig 12 17125 09 13
05 fpz;zpah gp.rig 14 16626 07 10
06 Nfhkuq;flty gp.rig 10 5831 09 13
07 gjtprpwpGu gp.rig 10 8362 09 13
08 %Jhh; gp.rig 42 37371 11 17
09 NrUtpy gp.rig 16 9130 09 13
10 Fr;rntsp gp.rig 23 20872 09 13
11 fe;jsha; gp.rig 23 30898 11 16
12 jpUkiy gp.rig   31791 09 13
13 ntUfy; gp.rig 10 5894 07 10

திட்டமிட்டு சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் பி;ரதேசங்களின் மக்கள் பிரதிநிதித்துவத்தை குறைத்து வர்த்தமானியிடப்பட்டுள்ளன என்பது புலனாகின்றது ஆகவே புதிய திருத்தத்தின்போது பொருத்தமான சபைகளுக்கு மக்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து பதிதாக வர்த்தமானி அறிவித்தல் இடப்பட வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

அதேவேளை புதிய திருத்த எல்லை நிர்னயத்தில் மூதூர் பிரதேச சபையை நகர சபையாகவும,; இன்னும் இரண்டு பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டு தோப்பூர் பிரதேச சபையும்,சம்பூர் பிரதேச சபையும் உருவாக்கப்பட்டு அதற்கான எல்லைகளை நிர்னயம் செய்து வர்த்தமானி அறிவித்தலுக்கு விடப்பட வேண்டுமெனவும்,அத்தோடு சிறுபான்மை சமூகத்தினர் செறிந்து வாழும் இடங்களில் புதிய வட்டாரங்கள் உருவாக்கப்பட வேண்டுமென்றும், அதற்கான முன்மொழிவுகள் தயாரித்து வழங்கப்பட வேண்டுமென்றும் கலந்துரையாடப்பட்டது.

 

இக்கலந்துரையாடலில் முன்னால் கிழக்குமாகாண சபை தவிசாளர் சட்டத்தரனி எச்.எம்.எம்.பாயீஸ்,மூதூர் பிரதேச சபையின் முன்னால் தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ்,கட்சியின் மத்திய குழுக்களின் தலைவர்கள்,முன்னால் உள்ளுராட்சி மன்ற பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.