கிரித்தலே இராணுவ முகாமிற்கு சீல் வைக்க நேரிட்டமை, மிலேனியம் சிட்டி சம்பவம் போன்றன காட்டிக் கொடுப்புக்களாகவே கருதப்பட வேண்டும்.
தற்போதைய அரசாங்கம் வரலாற்றில் என்னுமில்லாத அளவிற்கு நாட்டின் புலனாய்வுப் பிரிவினரை காட்டிக் கொடுத்து வருகின்றது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளினால் புலானய்வுப் பிரிவில் பெரும் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமையானது பாரிய அழிவிற்கான முன் சமிக்ஞையாக கருதப்பட வேண்டும்.
அரசாங்கம் இவ்வாறு காட்டி கொடுத்து வருகின்றவர்கள் தாய் நாட்டை பாதுகாத்தவர்களாவர்.
தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கிடையாது எனக் கூறி வரும் அரசாங்கம் தேசிய பாதுகாப்பை பூச்சியமாக மதித்து செயற்பட்டு வருகின்றது என ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
சிங்களப் பத்திரிகையொன்றுக்கு அளித்த நேர் காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.