தைப்பொங்கள் பண்டிகையை முன்னிட்டு கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வர்த்தக நிலையங்கள் இன்று (13.01.2016) பரிசோதனை செய்யப்பட்ட போது ஆறு வர்த்தக நிலையங்களில் இருந்து பாவனைக்குதவாத பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பிரிவிற்குப் பொறுப்பான மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஆர்.இன்பராஜ் தெரிவித்தார்.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் உள்ள சில்லரைக்கடைகள், உணவகங்கள் என்பன இன்று (13.01.2016) சுகாதார வைத்திய பரிசோதகர்கலாள் பரிசோதனை செய்யப்பட்ட போது ஆறு வர்த்தக நிலையங்களில் இருந்து பாவனைக்கு உதவாததும் காலாவதியானதுமான டின் மீன், மாஜரீன், முட்டை, ரொட்டி, சோறு போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக மேற்பார்வை சுகாதார பரிசோதகர் ஆர்.இன்பராஜ் தெரிவித்தார்.
பாவனைக்குதவாத பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் எச்சரிக்கப்பட்டதாகவும் இந் நடவடிக்கை தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் இடம் பெறும் என்றும்; அவர் மேலும் தெரிவித்தார்.