ஐனாதிபதி, பிரதமர் வருகையை எதிர்த்து யாழ்.நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் !

தேசிய பொங்கல் விழாவுக்காக ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் யாழ். வருகைதரவுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்.நகரில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
arpdam_jaff_007
இன்று காலை 10 மணிக்கு யாழ்.மத்திய பேருந்து நிலையத்தில் குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. 

குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள், தமிழ்தேசிய மக்கள் முன்னணியிர் கலந்து கொண்டனர். 

இதன்போது இனப்படுகொலை, போர்க்குற்றங்களுக்கு நீதி தேவை, இன்பிரச்சினைக்கு சர்வதேச மத்தியஸ்த்தத்துடன் தீர்வு, உயர்பாதுகாப்பு வலயங்களாக பிடிக்கப்பட்ட தமிழர் நிலங்களை விடுதலை செய், கடத்தப்பட்டவர்கள், காணாமல்போனவர்களுக்கு பதில் கூறு, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய் என்ற 5 கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் முன்வைத்தனர்.