இது தொடர்பாக நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கருத்து வெளியிட்டிருந்தார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டிருந்த அவர்,
கடந்த 1999ம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கட் போட்டிக்கு பிரபல பாதாள உலகக்கும்பல் தலைவன் தம்மிக்க அமரசிங்க போலி பாஸ்போர்ட்டில் அழைத்துச் செல்லப்பட்டிருந்தான்.
அப்போதைய கிரிக்கட் சபையின் தலைவரான திலங்க சுமதிபாலவே கிரிக்கட் சபையின் பணத்தில் தம்மிக்க அமரசிங்கவை அவ்வாறு அழைத்துச் சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் குறித்த போலிக் கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பாக திலங்க சுமதிபால கைது செய்யப்பட்ட போதிலும், போயா விடுமுறை தினமொன்றில் நீதிமன்ற வழமைக்கு மாறாக நீதிமன்றம் கூடி அவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்திற்குள் வைத்தே தம்மிக்க அமரசிங்க படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன், திலங்க வழக்கிலிருந்து தப்பித்துக் கொண்டிருந்தார்.
எனவே திலங்க சுமதிபாலவுடன் நேருக்கு நேர் மோதுவதற்கு எனக்கும் அச்சமாக உள்ளது. எனவே அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் அனைத்து தகவல்களையும் முன்வைக்கவுள்ளேன் என்றும் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.