மஹிந்த ராஜபக்ஸ இல்லாத சுதந்திரக் கட்சியை நினைத்தும் பார்க்க முடியாது : கீதா குமாரசிங்க !

மஹிந்த ராஜபக்ஸ இல்லாத சுதந்திரக் கட்சியை நினைத்தும் பார்க்க முடியாது என காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

geetha-gossip-3

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி இரண்டாக பிளவுபடுமாயின் அதில் நன்மையடையப் போகிறவர்கள் ஐக்கிய தேசியக்கட்சி என அனைவரும் அறிந்த விடயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போது எமது கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன என்னை அழைத்து காலி மாவட்ட ஒருங்கினைப்பு குழுவின் தலைமைப் பதவியை ஏற்குமாறு பணித்தார். என்னை தெரிவு செய்த மக்களுக்கு சேவை செய்வதற்காக நான் அந்தப் பதவியை ஏற்றுக் கொண்டேன்.

ஆனால், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விட்டு நான் வேறு ஒரு கட்சிக்கு செல்லமாட்டேன் என்றும் கீதா குமாரசிங்க இதன்போது தெரிவித்துள்ளார்.

என் வாழ்நாள் முழுவதும் இந்த கட்சிக்காக செயற்படுவேன் அதேபோல் மஹிந்த ராஜபக்ஸ இல்லாத சுதந்திரக் கட்சியை யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்