புதிய அரசியலமைப்பு தொடர்பிலும், விடுதலைப் புலிகளின் உறுப்பினர் சிவராஜா திலீபனுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமை தொடர்பிலும் தனது கருத்தை தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறிகையில்,
இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் எதிர்க்கட்சி ஒன்று நாட்டில் செயற்படக் கூடாது என்ற ஒரே நோக்கத்தை அடிப்படையில் வைத்தே அமைந்துள்ளது.
பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து கட்சிகளுமே ஆளும் கட்சிக்காக மாறியுள்ள நிலையில் கட்டாயமான எதிர்க்கட்சி ஒன்று தேவைப்படுகின்றது. ஆனால் அவ்வாறான ஒரு நிலைமை இல்லாது அரசாங்கத்தின் அனைத்து குற்றங்களுக்கும் துணைபோகும் வகையில் எதிர்க்கட்சிகள் செயற்பட்டு வருகின்றது.
ஆகவே மக்கள் இன்று சலிப்பில் உள்ளனர். அதேபோல் இன்று நாட்டில் அழுத்தம் கொடுத்து நாட்டை சரியான பாதியில் கொண்டு செல்லும் கட்சி ஒன்றை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதேபோல் கடந்த காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நாட்டை சரியான திசையில் வழிநடத்தி சென்றது. இப்போதும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் மட்டுமே நாட்டை பாதுகாக்கவும் காப்பாற்றவும் முடியும். ஆனால் கட்சியில் கொள்கையையும், தனித்துவத்தையும் அழிக்கும் வகையில் ஒரு சிலர் செயற்பட்டு வருகின்றனர்.
அதேபோல் நாட்டை வழிநடத்த வேண்டுமாயின் ஒரு தலைமையில் கீழேயே அது சாத்தியமாகும். இரண்டு தலைவர்கள் ஒன்றிணைந்து நாட்டை வழிநடத்த முடியாது. இரண்டு மாறுபட்ட கொள்கையுள்ள கட்சிகளினால் ஒன்றிணைந்து நாட்டை சரியான பாதையில் வழிநடத்த முடியாது. ஆகவே நாட்டின் தலைவர் ஒருவராக மட்டுமே இருக்க முடியும். அதற்கான மாற்றத்தை மக்கள் ஏற்படுத்த வேண்டும்.
கேள்வி:- புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்குவது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்:- புதிய அரசியலமைப்பு திருத்தும் ஒன்றை உருவாக்குவது தொடர்பில் இரண்டு பிரதான கட்சிகளின் உறுப்பினர்களும் அதிக அக்கறை செலுத்துகின்றனர். ஜனாதிபதியும் நேற்று விசேட உரை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். எனினும் எவ்வாறான ஒரு மாற்றத்தை உருவாக்க போகின்றனர் என்ற தகவல்கள் எவையும் இன்னும் கிடைக்கவில்லை. ஆகவே பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
கேள்வி:- அண்மையில் ஜனாதிபதி விடுதலை உறுப்பினருக்கு பொதுமன்னிப்பு வழங்கினார். இது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?
பதில்:- விடுதலைப் புலிகளை விடுதலை செய்வதும் எமது இராணுவத்தை தண்டிக்க வேண்டும் என்பதே இன்றைய அரசாங்கத்தின் நிலைப்பாடாக உள்ளது. அரசாங்கத்தின் தேவையும் அதுவாகவே உள்ளது. ஆகவே சர்வதேச நாடுகளையும் புலம்பெயர் அமைப்புகளையும் திருப்திப்படுத்த வேண்டுமாயின் அவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய நிலைமை அரசாங்கத்திற்கு உள்ளது.
ஆகவே அதற்கமைய நடக்கின்றது. நல்லாட்சி என்ற மாற்றமும் அதற்காகதானே ஏற்பட்டது. ஆகவே இந்த விடயத்தில் ஆச்சரியமடைய தேவையில்லை. அதேபோல் இப்போது ஜனாதிபதி புலிகளுக்கு பொதுமன்னிப்பு கொடுத்து வருவதும் இந்த நல்லாட்சியின் ஒரு எடுத்துக்காட்டு என்றார்.