லண்டனில் உள்ள பிரபல வங்கியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பணியாற்றும் இந்திய வம்சாவளி தம்பதியரின் மகளான கஷ்மியா வாஹி(11) என்ற சிறுமி உலகிலேயே மிகவும் பழமையான, மிகப்பெரிய அறிவுத்திறன் சமூக நிறுவனமான ‘மென்சா’ நடத்திய அறிவுத்திறன் போட்டியில் இங்கிலாந்து நாட்டிலேயே வயதில் குறைந்த முதல் மாணவியாக வெற்றி பெற்றிருக்கிறாள்.
பொதுஅறிவு தொடர்பான 150 கேள்விகளுக்கு அசத்தாலக பதிலளித்து, பிரபல அறிவியல் அறிஞர்கள் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங்கை விட இரு மதிப்பெண்கள் அதிகம் பெற்று அவர்களை விட அறிவு திறன் பெற்றவள் என்ற சாதனையை தற்போது படைத்துள்ள கஷ்மியா, மும்பையில் பிறந்தவராவார்.