ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நாடாளுன்றில் நாளை விசேட உரையாற்றவுள்ளனர்.
புதிய அரசியல் அமைப்பு ஒன்றை உருவாக்குவது தொடர்பிலான யோசனைத் திட்டம் நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
குறிப்பாக முழு நாடாளுமன்றையுமே அரசியலமைப்புப் பேரவையாக மாற்றும் உத்தேச திட்டத்தை ஜனாதிபதி நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு ஓராண்டு பூர்த்தியாகின்றது.
கடந்த ஓராண்டு காலத்தில் ஏற்பட்ட முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2016ம் ஆண்டுக்கான நாடாளுமன்ற அமர்வுகள் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.