மேய்ச்சல்தரை தொடர்பில் நடவடிக்கை -பொலிஸ் மா அதிபர் கிழக்கு அமைச்சருக்கு கடிதம்!

 

பழுலுல்லாஹ் பர்ஹான்
 
மட்டக்களப்பு மாவட்ட மேய்ச்சற்தரைப் பிரச்சினை தொடர்பில் மாகாண விவசாய அமைச்சர் பொலிஸ் மா அதிபர் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலகங்களில் நடைபெற்ற விவசாயக் கூட்டங்களின் பிரகாரம் மாதவணை, பெரியமாதவணை, நெளிகல் போன்ற மேய்ச்சற்தரைகளுக்கு கால்நடைகள் கொண்டு செல்லப்பட வேண்டும் என்று திர்மானிக்கப்பட்டது.
இதன் பிரகாரம் பண்ணையாளர்கள் தங்கள் கால்நடைகளை குறித்த பிரதேசங்களுக்குக் கொண்டு சென்றார்கள். இருப்பினும் சென்ற ஆண்டு போலவே இவ்வருடமும் இப்பிரதேசத்தில் அத்துமீறி பயிர்செய்கை மேற்கொள்ளும் வேறு மாவட்ட விவசாயிகளினால் பண்ணையாளர்களின் கால்நடைகள் சுடுதல், சுருக்கு வைத்தல், பிடித்துச் சென்று கட்டுதல் எனும் செயற்பாடுகளினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.
இது தொடர்பாக ஏறாவூர் மற்றும் கரடியனாறு பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்யப்பட்ட போதும் பண்ணையாளர்களின் முறைப்பாடுகள் உரியமுறையில் நடைமுறைக்கு உட்படுத்தப்படவில்லை.
அதன் பின்னர் இவ்விடயம் மாகாண விவசாய அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்ட போது வனபரிபாலன திணைக்களம், மேற்குறித்த பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், மற்றும் மட்டக்களப்பு மாவட்டப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்ட போதும் அவர்களது அசமந்தப் போக்கினால் பண்ணையாளர்கள் தொடர்ச்சியான பாதிப்பிற்கு உட்படும் நிலையே தொடர்கின்றது.
இந் நிலையில் விவசாய அமைச்சர் பொலிஸ் மா அதிபருக்கு இவ்விடயம் தொடர்பில் முறையிட்டதன் பேரில் இவ்விடயம் தொடர்பாக உடனடி விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஜெயசிங்க, குற்றம் மற்றும் போக்குவரத்துப் பிரிவிற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க ஆகிய பொலிஸ் அதிகாரிகளுக்கு நெறிவுறுத்தப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
DSC_0002????????????????????????????????????