வெளிவிவகார அமைச்சில் அமைச்சர் மங்கள சமரவீரவுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இலங்கையின் சகல இன மக்களின் நலன்களை நோர்வே எதிர்பார்த்தது. ஒரு வருடத்திற்கு முன்னர் இலங்கை பெற்ற ஜனநாயக வெற்றி மாற்றத்திற்கு வழிவகுத்தது.
விசேடமாக இலங்கை மீன்பிடி,விவசாயம், சூரிய மின்சக்தி ஆகிய துறைகளின் தொழிற்நுட்ப ஒத்துழைப்பு வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. நோர்வே அரசாங்கம் எப்போதும் இலங்கைக்காக குரல் கொடுக்கும் நாடு என்ற வகையில் இலங்கையில் புதிய முதலீட்டு சந்தர்ப்பங்களை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்படும்.
எதிர்காலத்தில் இலங்கையின் மறுசீரமைப்புக்காக நோர்வே ஒத்துழைப்புகளை வழங்கும்.
பல் கலாசார அங்கங்களின் அபிவிருத்தியை கருத்தில் கொண்டு மறுசீரமைப்பு நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் எனவும் நோர்வே வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.