அஷ்ரப் ஏ சமத்
இலங்கையில் நீலப் பசுமை யுகத்தை உருவாக்குவோம். வனஜீவ பாதுகாப்புக்காக
தற்பொழுது உள்ள 29.7வீத வன பரப்பினையாவது தமது எதிா்கால
சந்ததியினருக்காக பாதுகாப்போம் – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா
ஜக்கிய நாடுகள் ரெட் (UN-REDD) நிகழ்ச்சித் திட்டத்தின் இலங்கையின் வன
வளத்தினை பாதுகாத்திடுவோம் நிகழ்வு நேற்று(6) பி்.எம். ஜ.சி.எச்.ல்
ஜனாதிபதியும் மகாவலி,அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சா்
மைத்திரிபால சிறிசேனா தலைமையில் நடைபெற்றது.நீலப்பசுமை யுகத்தினை ஏற்படுத்துவதற்கு காலநிலை மாற்றங்கள் அனைத்து
உயிரினங்களிலும் தாக்கம் ஏற்படுத்தலில் பங்களிப்பு செய்கின்றது. இன்று
உலகளாவில் எதிா்கொள்ளும் முக்கிய சவால்களில் ஒன்றாக உலக வெப்பமயமாதலில்
மனித நடவடிக்கைகள் நேரடி தொடா்பை கொண்டு உள்ளது. உலக மக்கள் தொகை
2050ஆம் ஆண்டு மற்றுமொரு 2 பில்லியன் ஆக அதிகரிக்கப்படும். மக்கள்
தொகையின் அதிகரிப்பு காரணமாக மேலும் உலக வெப்பமடைதலை கட்டுப்படுத்த
நடவடிக்கை எடுத்தல் முற்றிலும் அவசியம் ஆகிவிட்டது. இதனால் எதிா்கால
தலைமுறையினரின் நலனுக்காக ஒரு நிலையான உற்பத்தி செயல்முறை மற்றும்
நுகா்வு வடிவங்களுக்காக உலகின் ஒரு நிலையான உற்பத்தி செயல்முறை மற்றும்
நுகா்வு வடிவங்களுக்காக உலகின் வரையறுக்கப்பட்ட இயற்கை வளங்களை
பயன்படுத்தி பொருத்தமான நடவடிக்கை நடைமுறைப்படுத்தல் இன்றை ய
தலைமுறையினரின் தலையாய கடமையாகும் என ஜனாதிபதி இங்கு வலியுறுத்தினாா்.இந் நிகழ்ச்சித்திடடத்தின் பின்னா் (UN-REDD) நிகழ்ச்சித் திட்டத்தினா்
ஊடகவியலாளா் மாநடொன்றை நடாத்தினா் இதில் ஜனாதிபதியின் சுற்றாடல்
அமைச்சின் ஆலோசகா் பேராசிரியா் டப்பிளியு. எல். சுமதிபால, காட்டுவளம்
சம்பந்தமான ஆலோசகா் அநுர சத்துரங்க, நிறைவேற்று அதிகாரி ஹேமந்த விதானகே
போன்றோா் கடல் மற்றும் சுற்றாடல், வனம். ஜீவராசிகள் பற்றி கருத்து
தெரிவித்தனா்.
அவா்கள் இங்கு கருத்து தெரிவிக்கையில் காலநிலை
காலநிலை மாற்றங்கள் பற்றி ஜக்கிய இராச்சியத்தின் ஒன்று கூடலில்
இலங்கையில் 1992ஆம் ஆண்டில் கைச்சாத்திடப்பட்டது. உலகின் அபிவிருத்தி
அடைந்து வரும் நாடுகளில் காடுகளை அழித்தலினால் ஏற்படும் வாயு மற்றும்
சூழல் மாசியை தடுப்பதற்காக முன்னிற்கும் ஓர் திட்டமாகும். ரெட்
திட்டத்தின் மூலம் காடழிப்பினால் ஏற்படும் சூழல் மாசுனை குறைத்தல்,
கடாழிப்பினால் ஏற்படும் மண்னரிப்பினை குறைத்தல், காடுகளுக்கு முறையான
முகாமையினை மேற்கொள்ளல், காடுகளின் காபன் அளவினை அதிகரித்தல்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் வழிநடத்தலின் கீழ் வன பாதுகாப்பு
அலுவலகத்த்துடன் இணைந்து வனஜீவி பாதுகாப்பு, அலுவலகம் மற்றும் காலநிலை
மாற்றங்களுக்கான அலுவலகத்தினால் இலங்கையின் வன பரப்பினை 29.7 வீதத்தில்
இருந்து 32 வீதம் வரையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.
காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் அச்சுறுத்தல்களை உலகின் ஒவ்வொரு
இடங்களிலும் காணக்கூடியதாக உள்ளது. மேலும் அதிகரித்து செல்லும் உலக
வெப்பத்தினால் ஏற்படக்கூடிய அவசர நிலைகளுக்கு உலக நாடுகள் மிகவும்
அவதானத்துடனேயே உள்ளது. நான்கு மாதங்களில் நடைபெறும் 12 வீத வரையிலான
சூழல் மாசுக்கு பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மற்றும் வேறு பணிகளுக்காக
நடைபெறும் காடழிப்பே பிரதான காணரமாகும். ரெட் திட்டத்திற்காக இலங்கை
அரசினால் மாணவ அமைப்புகள் நாட்டு மக்கள் காடுகளை விரும்புவோா் போன்று
தனியாா் துறையினரையும் பங்குதாரா்களாக்க நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன் மூலம் இலங்கையின் வன வளத்தினை பாதுகாப்பதே
பிரதான நோக்கமாகும்.
பூகோளவில் இலங்கை 532.619 சதுர கி.மீ அளவிற்கு கடல், வளங்கள் கொண்ட
அமைந்துள்ளதுடன் இது 1.714 ,687 வரை விஸ்தரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
மற்றும் 1600 கி.மீ. நீளமான கவா்ச்சியான சமயோசித கடற்கறையைக்
கொண்டுள்ளது. சுற்றாடல் மாசுபாடு இல்லாமல் இந்த கடல் வளங்கள் நிர்வகிக்க
நிலையான அபிவிருத்தி உத்திகள் அவசியமாகும்.
சமுத்திரத்தில் உள்ள மீன் வளங்களை பாதுகாத்து நிலையான உத்திகளை
செயல்படுத்த வேண்டும், இலங்கையின் கடலில் பவளப்பாறைகள் கடல்
வாழ்வினங்களை பாதுகாத்தல், இலங்கையின் கரையோர தரைப்பகுதி, கனிம வளங்கள்
பாதுகாத்தல், கடற்கரை மற்றும் கடல் விளையாட்டுக்களை ஊக்குவித்தல்,
சர்வதேச கடல் தொடா்பில் பாதைகளின் புவிசாா் வரைபடத்தில் இலங்கை ஒரு
முக்கிய மையமாக உள்ளது. எனவே பல பொருளாதார நன்மைகள் கடல் பாதுகாப்பு
கவனத்தை பெற்றுக் கொள்ளல் வேண்டும். சமுத்திரத்தினை காற்று கடல்,
மற்றும் சமுத்திர வெப்ப மாற்றத்திற்காக பயன்படுத்தி அபிவிருத்தி
செய்யப்படல் வேண்டும்,
மேலும் பசுமை அபிவிருத்தியில் தொழிற்சாலைகள் தயாரிப்புகளும் பொருளாதார
நன்மைகள் வழங்கும் வேளை சூழலை பாதுகாத்தல் சூழல் – நட்பு தரத்திற்கு
ஏற்பாடு செய்யப்படல் வேண்டும். பசுமையான விவசயாம், பசுமையான சக்தி,
பசுமையான நிர்மாணத்துறை , பசுமையான போக்குவரத்து. பசுமையான நகரங்கள்,
பசுமையான வேலைவாய்ப்பு போன்ற வற்றில் நீலப்பசுமை அபிவிருத்தியில் கவனம்
செலுத்தி இலங்கையில் எதிா்கால தலைமுறையினருக்கு உலகில் அழகான
மகிழ்ச்சியான சொக்கபுரியாக்கவும் வளமான நிலையான ஒரு இலங்கையை உருவாக்க
சகலரும் ஒத்துழைக்க வேண்டும்.