ஒவ்வொரு தனிமனிதனின் எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் நாட்டின் எதிரகாலம் குறித்தே சிந்திக்க வேண்டும் !

ஒவ்வொரு தனிமனிதனின் எதிர்காலம் குறித்து சிந்திக்காமல் நாட்டின் எதிரகாலம் குறித்தே சிந்திக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தான் ஜனாதிபதியாக பதவியேற்று ஒருவருடம் பூர்த்தியாகின்ற இந்த சந்தர்பபத்தில் தன்னை சந்திக்கின்ற ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலேநு தரப்பினரும் அடுத்த ஐந்து வருடங்களின் பின்னர் என்ன செய்யப்போகின்றீர்கள் என வினவுவதாகவும் அதறபு பதிலளிக்கும் வகையிலே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

மாவட்ட இணைக் குழுவின் தலைவர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து கருத்து தெரிவித்த ஜனாதிபதி மக்களின் ஒரே எதிர்பார்ப்பான புதிய அரசியலமைப்பு தயாரிப்பு விடயத்தில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதோடு அது குறித்து இது வரையும் எந்தவொரு உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களும் மேற்கொள்ளப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். 

இதனை அடிப்படையாக கொண்டு சிலர் பொய்யான கருத்துக்களை பரப்புவதோடு இனவாதத்தை தூண்டுவதற்கு முயற்சி செய்வதாகவும் அரசியலமைப்பு மாற்றம் என்பது மக்களுக்கு தெரியாமல் ஒரு போதும் மேற்கொள்ளப்பட மாட்டாது என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். 

மாவட்ட இணைக்குழுத் தலைவர்கள் 54 பேருக்கு ஜனாதிபதி நியமனக் கடிதங்களை வழங்கி வைத்ததோடு வரலாற்றில் முதல் தடவையாக நாட்டின் அபிவிருத்திக்காக இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்துகொண்டுள்ளதோடு மாவட்டத்தின் அபிவிருத்தி பணிகளில் பங்காளர்கள் போன்று செயற்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

தேர்தல் காலத்தில் ஏற்படுத்திக்கொள்ளப்ப முரண்பாடுகள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு மேலதிகமாக சென்று நாட்டின் அபிவிருத்திக்கான நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் அனைவரும் செயற்பட வேண்டும் என ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.