இரசாயன ஆயுதங்கள் நூறு சதவீதம் அழிக்கப்பட்டுவிட்டது: சிரியா அறிவிப்பு!

சிரியாவில் அதிபர் படைக்கும் கிளர்ச்சியார்களுக்கும் இடையே உச்சக்கட்ட போர் நடந்துவந்த வேளையில், அதிபர் படையினர் ரசாயனக் குண்டுகளை வீசி ஆயிரக்கணக்கான பொதுமக்களை கொல்வதாக போராளிகள் குற்றம்சாட்டி வந்தனர்.

பின்னர் ரசாயன ஆயுதங்கள் அழிக்கும் பணிகள் ஐ.நா.- சர்வதேச ரசாயன ஆயுதக் கண்காணிப்பு அமைப்புகளின் புதிய கூட்டமைப்பு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் அனுமதியுடன் கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. 
ஐக்கிய நாடுகளின் கண்காணிப்பில் செயல்படும் ரசாயன ஆயுத தடுப்பு அமைப்புக்கான செய்தி தொடர்பாளர் மாலிக் எல்லாஹி கூறுகையில், நூறு சதவீதம் அழிக்கப்பட்டுவிட்டதாக தெரிவித்தார். 

5fb2d22e-3f24-4f89-b8b9-23829c489423_S_secvpf

இருப்பினும் உள்நாட்டு போரில் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ரசாயன ஆயுதங்கள் குறித்து அச்சம் இன்னும் நிலவுவதாக ஐக்கிய நாடுகளுக்கான சர்வதேச நீதிக்கான நீதிமன்றம் மற்றும் சர்வதேச கிரிமினல் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. 

சிரியாவில் இருந்து அகற்றப்பட்ட 1,300 மெட்ரிக் டன்கள் ரசாயன ஆயுதங்கள், அமெரிக்க கப்பலில் வைத்து அழிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.