இந்தியா பாதன்கோட் விமான தளத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பிரான்ஸ் மற்றும் ஜப்பான் கடும் கண்டனம் !

 

images
இந்தியா பாதன்கோட் விமான தளத்தில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலுக்கு பிரான்ஸ் மற்றும் ஜப்பான் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

ஜப்பான் வெளியிட்டுள்ள கண்டன செய்தியில், “பயங்கரவாதத்தை எந்த காரணம் கொண்டும் நியாயப்படுத்த முடியாது. மேலும் ஜப்பான் இந்திய மக்களுடனும் இந்திய அரசுடனும் எப்போதும் ஒற்றுமையையே விரும்புகிறது.

தீவிரவாதத்தை எதிர்க்க இந்திய அரசுடன் ஜப்பான் எப்போதும் துணை நிற்கும்.”  என்று கூறப்பட்டுள்ளது

அதேபோல், பதான்கோட் விமான நிலைய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரான்ஸ் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவின் பக்கம் துணைநிற்கும் என்றும் கூறியுள்ளது. பிரான்ஸ் அரசு வெளியிட்ட இந்த செய்தியை வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் விகாஷ் ஸ்வரூப் குறிப்பிட்டுள்ளார். 

பஞ்சாப் மாநில பதான்கோட் விமான தளத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 7 பேர் உயிரிழந்தனர். தீவிரவாதிகள் தரப்பில் 6 பேர் கொல்லப்பட்டனர். 

முன்னதாக பதான்கோட் தாக்குதலுக்கு ஜம்மு காஷ்மீரை மையமாக கொண்ட ஐக்கிய ஜிகாத் கவுன்சில் அமைப்பு கடந்த திங்கட்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.