ஷரீப் கலாச்சார நிலையத்துக்கான மலசல கூடம் சுகாதார அமைச்சிரினால் திறந்து வைப்பு!

அபு அலா –

சமூக வலுவூட்டல் மற்றும் நலனோம்புகை அமைச்சு வீட்டுக்கு வீடு, கிராமத்துக்கு கிராமம் 15 ஆயிரம் கிராமங்களை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் 1 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஷரீப் கலாச்சார நிலையத்துக்கான மலசல கூடம் இன்று காலை (03) கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீரினால் திறந்து வைக்ப்பட்டது. 

2_Fotor

குறித்த நிறுவனத்தின் தலைவர் எம்.எம்.கமால்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்த திறப்புவிழாவுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், கௌரவ அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, உதவிச் செயலாளர் ரீ.ஜே.அதிசயராஜ், விஷேட அதிதியாக அட்டாளைச்சேனை திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.அஸ்லம், சுகாதார அமைச்சரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரி எம்.ஐ.எம்.நயீம், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.எல்.கலீல் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

3_Fotor n 1