மீரா .எஸ். இஸ்ஸடீன் – ஊடகச் செயலாளர் , சுகாதார அமைச்சு
உலக சுகாதார அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி டாக்டர் அரவிந் மதார் தேசிய நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் துசார ரணசிங்க ஆகியோர் அடங்கிய குழவினர் சுகாதார இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹஸனலியுடன் நேற்று சுகாதார அமைச்சில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.இதன் போது கிழக்கு மாகாணத்தில் தொற்றா நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்கும் பொருட்டு பொதுச் சுகாதார உத்தியோகத்தர்களுக்கு விழிப்புணர்வு செயலமர்வுகளை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.இச் சந்திப்பில் அமைச்சின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.