பி.எம்.எம்.ஏ.காதர்
அம்பாறை மாவட்ட திவிநெகும பயனாளிகளின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும் திங்கட்கிழமை28-12-2015)அம்பாறை சதொச வளாகத்தில் நடைபெற்றது.
அம்பாறை மாவட்ட திவிநெகும பணிப்பாளர் சந்துருவன் அநுருத்த தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெற்றோலிய வள பிரதி அமைச்சர் அநோமா கமகே கலந்து கொண்டு கண்காட்சியைத் திறந்து வைத்து விற்பனையையும் ஆரம்பித்து வைத்தார்.
ஆம்பாறை மாவட்ட செயலக திவிநெகும மாவட்ட திட்ட முகாமையாளர் யு.எல்.எம்.சலீமின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இங்கு மாவட்டச் செயலாளர் துசித்த பி.வனிகசிங்க,மேலதிக மாவட்டச் செயலாளர் கே.விமலநாதன்,உதவி மாவட்டச் செயலாளர்,உதாற ஆகியோருடன் பிரதேச செயலாளர்களான ஏ.எல்.எம்.சலீம்,யு.எம்.ஹனீபா,ஏ.எம்.நஸீர,றிபா உம்மா ஆகியோரும்; கலந்து சிறப்பித்தனர்.
மேலும் திவிநெகும அதிகாரிகளான ஏ.அர்.எம்.சாலிஹ்;, ஏ.சி.அன்வர், ஏ.சி.ஏ.நஜீம்,எஸ்.சிவம்,எம்.அரசரட்னம்,எம்.இமாமுதீன்,ஏ.அச்சுமுகம்மட்,எம்.அம்சார்,எம்.ஜே.எம்.நிஹ்மத்துள்ளா மற்றும் மாவட்ட திவிநெகும உள்ளக கணக்காய்வு உத்தியோகத்தர்களுடன் புலனாய்வு உத்தியோகத்தர்களும்,திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளீட்ட பலரும்; கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பத்து பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள திவிநெகும பயனாளிகளின் உற்பத்திப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.இந்த நிகழ்வில் திவிநெகும பயனாளிகள் பலருக்கு தொழில் உபகரணங்கள் பிரதி அமைச்சரால் வழங்கி வைக்கப்பட்டது.