கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஐரோப்பிய நாட்டிற்கான சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பிய வேளையிலேயே இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.
கலப்பு நீதி மன்றம் ஒன்றை உருவாக்கி யுத்த வெற்றியை பெற்றுக் கொடுத்த இராணுவத்தினரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த முனைவது மட்டுமன்றி நாட்டையும் இரண்டாக பிளவுப்படுத்த இந்த அரசு முயல்வதாக, நாங்கள் தேசிய சுதந்திர முன்னணி என்ற ரீதியில் நாட்டிற்குள் தொடர்ந்து உரைகளை முன்னெடுத்திருந்தோம் என தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களின் கோரிக்கைக்கு அமைய 7 நாடுகளில் 14ற்கும் அதிகமாக உரையாற்றக்கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது.
இதன் போது எமது நாட்டு மக்கள் மிகுந்த ஆர்வத்தோடு இவற்றில் கலந்து கொண்டதாகவும் இலங்கையில் நடக்கும் விடயங்களை தெரிந்துக் கொள்ள மிகுந்த அக்கறையோடு இருப்பதாகவும் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகள் வருமாறு,
கேள்வி: ”அப்பம் புரட்சி” நடாத்துவதற்கு தயாராக இருக்கும் இந்த நேரத்தில் நீங்கள் தற்போதைய அரசாங்கத்தின் செயல்திறன் பற்றி என்ன சொல்ல நினைக்கின்றீர்கள்?
பதில்: சிக்கனத்தைப் பற்றிய இந்த அரசாங்கம் ஜனவரி 8ஆம் திகதி முதல் ”அப்பப் புரட்சியை” ஏற்படுத்த தயாராகி வருகிறது இதிலிருந்தே இந்த அரசின் தன்மை தெரிகிறது.
யுத்தவெற்றியை கொண்டாட வேண்டாம் என கூறிய இந்த அரசு அப்பப் புரட்சியை கொண்டாட பொதுமக்களின் பெருமளவிலான பணத்தை சூறையாடுகிறது. அத்துடன் இந்த 10 மாத காலப்பகுதியில் பொதுமக்களின் நல்லெண்ணங்களை இல்லாமல் செய்த ஒரேயொரு அரசு இதுவென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கேள்வி: இன்று உங்களைப் பார்க்க வந்த ஊடகவியலாளர்களுக்கு இங்குள்ள அதிகாரிகளால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதை பற்றி உங்களது கருத்து என்ன?
பதில்: ஆம், இது தான் இன்றைய அரசின் நல்லாட்சியின் நிலைமை என்று விமல் வீரவன்ச குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை விமல்வீரவன்சவை விமான நிலையத்தில் வரவேற்பதற்காக தேசிய முன்னணியின் பிரதான செயலாளர் ப்ரியஜித் விதாரன உள்ளிட்ட இந்த கட்சியின் பிரமுகர்கள் பலரும் வந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்