இங்கிலாந்தில் வீசிய ‘பிராங்க்’ என்ற புயல் வடக்கு பகுதியில் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. புயல் காரணமாக பலத்த மழை கொட்டியது.
யார்க் உள்ளிட்ட ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளம் யார்க்ஷிர் மற்றும் பல நகரங்களில் புகுந்தது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் அங்கு தங்கியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர்.
பலத்த வேகத்துடன் புயல் காற்று வீசியதால் பல மரங்கள் சாய்ந்தன. வீட்டுக் கூரைகள் காற்றில் பறந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டு ஆயிரக் கணக்கான வீடுகள் இருளில் மூழ்கின. வடக்கு அயர்லாந்தில் வெள்ளம் சூழ்ந்தது. ரோடுகள் மற்றும் வீடுகள் மூழ்கின. ஸ்காட்லாந்திலும் இதே நிலை தான் உள்ளது.
இங்கு வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த ‘பிராங்க்’ புயலால் இங்கிலாந்தில் ரூ.30 ஆயிரம் கோடிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.