ஸ்பெயின் நாட்டைச் பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால். களிமண் தரையில் ஜாம்பவானாக விளங்கும் இவருக்கு மாட்ரிட்டில் உள்ள ஐரோப்பிய பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.
மாட்ரிட் நகரில் நடைபெற்ற இந்த பட்டமளிப்பு விழாவில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்டனர். டாக்டர் பட்டம் பெற்ற நடால் பேசுகையில், ‘‘குடும்பம், சமூகம், ஒழுக்கம், கட்டுப்பாடுகள் ஆகியவை விளையாட்டுத்துறையில் சாதிப்பதிற்கு முக்கிய காரணிகளாக உள்ளன. இவைகளின் ஆதரவு இல்லாமல் விளையாட்டுத்துறை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் சிறந்த மனிதனாக உருவாகியிருக்க முடியாது’’ என்றார்.
நடால் ஒற்றையர் ஆட்டத்தில் இதுவரை 14 முறை கிராண்ட் சிலாம் பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 2008-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.