மத்திய மந்திரிசபை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் இந்தியா–வங்காளதேசம் இடையேயான எல்லைவரம்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
முன்னதாக இம்மசோதா தொடர்பாக இந்திய உள்துறை செயலாளர் எல்.சி. கோயல் மற்றும் வங்கதேச உள்துறை செயலாளர் மொசாமல் ஹக் கான் ஆகியோர் சந்தித்து பேசி இம்மசோதா தொடர்பாக ஒருமித்த கருத்தை ஏற்படுத்தினர். முதலில் இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ.க. மற்றும் திரிணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தற்போது இம்மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.