இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர்கள் குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்த்தன ஆகியோரின் நிறுவனங்கள் கொழும்பு மாநகரசபையினால் கறுப்புப்பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
அண்மையில் கொழும்பில் நடத்தப்பட்டு பாரிய சர்ச்சையை உருவாக்கியுள்ள என்றிக் இக்லேசியஸின் இசை நிகழ்ச்சிக்கான விநோத வரியை செலுத்தாமையே இதற்கான காரணமாகும்.
இந்த தகவலை இன்று செய்தியாளரிடம் வெளியிட்ட கொழும்பு மாநகர முதல்வர் ஏ ஜே எம் முஸம்மில், இந்த நிகழ்ச்சி தொடர்பில் தமதுசபைக்கு 29 மில்லியன் ரூபாய்களை விநோத வரியாக செலுத்த வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார்.
இந்தநிலையில் அந்த தொகை செலுத்தப்படும் வரை குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்த்தனவின் நிறுவனங்களுக்கு கொழும்பு மாநகரசபை பிரதேசத்தில் நிகழ்வுகளை நடத்தமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.