இன்று முதல் தற்காலிகமாக சீகிரிய ஓவியங்களை புகைப்படம் எடுக்கத் தடை !

images

சீகிரிய ஓவியங்களை புகைப்படம் எடுப்பது இன்று முதல் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது. 

தொல்பொருள் திணைக்கள பிரதானிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பிரஷாந்த குணரத்ன குறிப்பிட்டுள்ளார். 

புகைப்படம் எடுக்கும் போது, ஏற்படும் பிளாஷ் ஔி (flash light) காரணமாக ஓவியங்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக, தெரியவந்துள்ளது. 

விஷேடமாக சீகிரிய ஓவியங்களைப் பார்வையிட வரும் சுற்றுலாப் பயணிகள் இந்தக் காலப் பகுதியில் உயர்வடைந்துள்ளதால், அதிகமான சேதங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. 

இம் மாத ஆரம்பம் முதல் நேற்று வரை மாத்திரம் சீகிரிய ஓவிங்களைப் பார்வையிட 95,000 பேர் வரை வருகை தந்துள்ளதாக, பிரஷாந்த குணரத்ன சுட்டிக்காட்டியுள்ளார். 

இதனால் தொல்பொருள் திணைக்கத்தினருடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலின் பின்னர், புகைப்படங்களை எடுக்க தற்காலிகமாக தடை விதிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.