விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, ஐக்கிய மக்கள் சுந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கவில்லை என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் நான்கு கட்சிகளே உத்தியோகபூர்வமாக அங்கம் வகிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேச விமுக்தி ஜனதா கட்சி, மஹஜன எக்சத் பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா மஹஜன கட்சி ஆகியனவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.
இந்த கட்சிகளின் வரிசையில் தேசிய சுதந்திர முன்னணி கிடையாது. மஹஜன எக்சத் பெரமுன கட்சியுடன் நிலவி வரும் முரண்பாடுகள் களையப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.