அபு அலா
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையம் மற்றும் அட்டாளைச்சேனை பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய பொதுமக்கள் நடமாடும் சேவை இன்று (29) அட்டாளைச்சேனை அல் முனீறா பெண்கள் உயர் பாடசாலையில் இடம்பெற்றது.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அக்கரைப்பற்று பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.கே.டி.ஹெமந்த, அட்டாளைச்சேனை பிரதேச செயலக செயலாளர் ஐ.எம்.ஹனிபா, அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலை பதில் பொறுப்பதிகாரி டாக்டர் ஜே.யுசுப் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 380 சிவில் பாதுகாப்புக் குழுக்கள் தற்போது இயங்கிக்கொண்டு வருகின்றது. அக்குழுக்களின் மூலம் இன்று பல்வேறுபட்ட குடும்பப் பிரச்சினைகளும், குறிப்பிட முடியாத வேறு பிரச்சினைகளும் பொலிஸ் நிலையங்களுக்கு வராமலே அக்குழுக்கள் மூலம் தீர்த்து வைக்கின்றதாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமில் கூறினார்.
இக்குழுக்களின் தலைவர்கள் மற்றும் செயலாளர்கள் ஆகியோர்களின் செயற்பாடுகளை பாராட்டி அம்பாறை மாவட்ட பொலிஸ் திணைக்களத்தினால் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.