இராணுவத்தின் உள்ளக விசாரணை ஒன்றின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள கெப்டன் எல்.எம் டி. விமலசேன என்பவர் யாழ்ப்பாண இராணுவ முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
எனினும் கப்டன் விமலசேனவே கப்டன் திஸ்ஸ என்பதை உறுதிப்படுத்த முடியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் பொலிஸ் தரப்பு தகவலின்படி தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் கெப்டன் விமலசேனவே கப்டன் திஸ்ஸ என்று உறுதிப்படுத்துகிறது.
குறித்தவரின் பெயர் திஸ்ஸ விமலசேன என்றும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த கப்டன் திஸ்ஸ விமலசேனவே 2013ல் அனைத்து மாணவர் ஒன்றியத்தின் இரண்டு மாணவர்களது கொலைகளுக்கு காரணமானவர் என்று அந்த ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த இரண்டு மாணவர்களும் விபத்தில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட போதும் அவர் கொலை செய்யப்பட்டதாக ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கிடையில் 2013ஆம் ஆண்டு மேல்நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரட்னவின் மீது தாக்குதல் நடத்தியவரும் இந்த திஸ்ஸ விமலசேனவே என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.