சீனாவின் ஒரு குழந்தை திட்டம் அதிகாரபூர்வமாக முடிவுக்கு வந்தது!

chineseMotherBaby_2579540b

சீனாவில் 2016-ம் ஆண்டு முதல் தம்பதிகள் 2 குழந்தைகள் பெற்றுக்கொள்ள சீன அரசு அதிகாரபூர்வமாக அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடு சீனா இருந்து வருகிறது. சமீபத்தில் எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணகெடுப்பின் படி அந்நாட்டின் மக்கள் தொகை சுமார் 136 கோடி ஆக இருப்பது தெரியவந்தது.

மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக “நாம் ஒருவர் நமக்கு ஒருவர்” என்ற திட்டத்தை 1979ல் சீன அரசு அறிவித்தது. அதனை தொடர்ந்து ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக்கொள்ள முடியும். இந்த சட்டத்தை மீறுவோருக்கு அடிப்படை வசதிகள் மறுக்கப்படுவதுடன், அபராதமும் விதிக்கபட்டது.

இந்நிலையில் சீனாவில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது கணக்கெடுப்பில் தெரியவந்தது. அந்நாட்டில் உழைக்கும் திறன் குறைந்து வருவதாகவும், இதனால், பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்றும் தெரியவந்தது.

அதனைதொடர்ந்து ஒரு குழந்தை திட்டத்தை ரத்து செய்வதாக, சீன அரசு, சமீபத்தில் தெரிவித்தது. இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

வரும் புத்தாண்டு முதல் அந்த சட்டத்தி்ல் மாற்றம் செய்யப்பட்டு 2 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ள சீன அரசு அனுமதி அளித்துள்ளதாக சீன அரசின் அதிகாரபூர்வ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.