அமெரிக்க பாராளுமன்றத்தில் கடைசியாக ஜனவரி 12ல் உரையாற்றுகிறார் ஒபாமா!

 

images

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, அமெரிக்க பாராளுமன்றத்தில் கடைசி முறையாக ஜனவரி மாதம் 12–ம் தேதி உரை ஆற்றப்போகிறார். இதை அவர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு இறுதியில் முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 2016–ம் ஆண்டு, நவம்பர் 8–ந் தேதி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்காவின் அதிபராக 2008 முதல் இருந்து வருகிறார் ஒபாமா.

இந்நிலையில் ஒபாமா தனது ஆதரவாளர்களுக்கு இ–மெயில் மூலம் அனுப்பியுள்ள செய்தியில், ”எனக்கு இன்னும் 12 மாதங்கள் உள்ளன(பதவி காலம்). அதற்குள் எவ்வளவு மாற்றங்களை கொண்டு வரமுடியுமோ அவளவு மாற்றங்களை கொண்டு வர முடிவு செய்துள்ளேன். எனது ஆட்சி காலாத்தில் வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளது, கார்பன் வெளிபாடு குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த பொருளாதாரமும் வளர்ச்சியடைந்துள்ளது. உங்களை போன்றவர்களால் அமெரிக்காவுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது’’ என கூறி உள்ளார்.