ஜனாதிபதி செயலகத்தின் முக்கிய அதிகாரிகள் பலர் தமது பதவிகளிலிருந்து அகற்றப்படுவர் !

 ஜனாதிபதி செயலகத்தின் முக்கிய அதிகாரிகள் பலர் தமது பதவிகளிலிருந்து அகற்றப்படும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர்.
MAITHRI MAHINTHA

கடந்த ஜனவரி 09ம் திகதி இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிப் பதவி மைத்திரிபால சிறிசேன வசம் வந்திருந்தது. அதன் மூலம் ஜனாதிபதி செயலகத்தின் கட்டுப்பாடும் அவருக்கு கீழ் வந்திருந்தது.

எனினும் தனக்கு நம்பிக்கையான புதிய அதிகாரிகள் மூலம் ஜனாதிபதி செயலகத்தை நடத்திச் செல்வதற்குப் பதிலாக முன்னைய ஜனாதிபதி மஹிந்த நியமித்திருந்த அதிகாரிகளை தொடர்ந்தும் அவர்களின் பதவியில் நீடிப்பதற்கு மைத்திரி இடமளித்திருந்தார்.

இதன் காரணமாக பல்வேறு அரசியல் மற்றும் அலுவலக நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.

இந்நிலையில் ஜனாதிபதி செயலகத்தின் ஊழியர்களில் பெரும்பாலானவர்களை அப்பதவிகளில் இருந்து அகற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவெடுத்துள்ளார். இதில் முக்கிய பதவிகளை வகிக்கும் ஒருசிலரும் உள்ளடங்கியிருப்பதாக தெரிய வந்துள்ளது.

எதிர்வரும் ஒன்பதாம் திகதிக்குப் பின்னர் மேற்கொள்ளவுள்ள இந்த மாற்றத்தினை அடுத்து உடனடியாக பல புதிய அதிகாரிகள் ஜனாதிபதி செயலகத்திற்குள் உள்வாங்கப்படவுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.