நல்லாட்சியை உருவாக்கினோம் என உரத்த குரலில் கூறும் நீங்கள் சாதித்தது என்ன ?

சுனாமி ஆர்பரித்த அலை..உயிர்களையும் உறவுகளையும் உடமைகளையும் ஒரே பொழுதில் காவு கொண்ட இயற்கையின் தாண்டவம். 

அதிலும் ஆபத்துக்களில் உயிரிழப்புகளை கிழக்கு கரையோரம்  மூதூரிலிருந்து மட்டக்களப்பு மருதமுனை பொத்துவிலென அனைத்து பிரதேசங்களும் கண்டிருந்தது. அந்த ஆழி அலையடித்து ஓய்ந்த பிறகு அககரைப்பற்று பிரதேசத்திலே உடைமைகளை இழந்த வீடற்ற ஏழைகளுக்கான சுனாமி வீட்டுத்திட்டம் சவூதி அரசால் கட்டப்பட்டது.சவூதி அரசே நேரடியாக அமைச்சர் பேரியல் அஷ்ரப் ஊடாக இந்த வீட்டுத்திட்டத்தை நடை முறைப்படுத்தியிருந்தது. 

akkaraipattu tsunami house

இனவாத சக்திகளின் கெடுபிடிக்குள் அகப்பட்டு வீடு பகிர்ந்தளிக்கப்படும் போது மூன்று இன மக்களுக்கும் விகிதாசார அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என ஜாதிக ஹெல உறுமய என்கின்ற இன வாத (இன்றைய நல்லாட்சி யின் பங்குதாரர்களால் ) கட்சியினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு சுமார் பதினொரு ஆண்டுகளாக வீடுகள் எல்லாம் பாம்புகள் வசிக்கும் புற்றுக்களாகின..அதே நிலை தொடர்கிறது….
1.ஊடகங்களாலும் சில சந்தர்பவாத அரசியல் வாதிகளாலும் முன் வைத்த அமைச்சர் பேரியல் அஷ்ரப் பினுடைய செல்வாக்கை இல்லாமல் செய்வதற்க்கு அமைச்சர் அதாஉல்லாஹ் தான் சிங்களவரை தூண்டியிருக்கிறார் என செய்திகளும் புரளிகளும் கிளப்பிவிடப்பட்டன…ஆனால் சிங்கள இனவாதிகளால் முடுக்கி விடப்பட்ட இந்த மக்களுக்கு வழங்கவிருந்த வீடுகளுக்கெதிரான விடயத்திற்கு ஆளை ஆள் மாறி குற்றம் சுமத்தினார்களே ஒழிய ஏழைகளின் நிலையை உணரவில்லை

இதற்குள் கடந்த சில வருடங்களாக மக்களை தூண்டி நடு வீதிகளிலும் மாநகரசபை வளாகத்திலும் பிரதேச செயலகத்திலும் சோறு ஆக்குதல் வீதி மறியல் கிழங்கவித்தல் என்பன இடம்பெற்றன.
இந்த வருடம் இப்பதிவு இடும் வரை எதுவுமே இடம்பெறவில்லை.மக்களது வீடுகள் நல்லாட்சியில் மக்களுக்கு வழங்கப்பட்டுவிட்டனவா?

நீங்கள் நடாத்திய நாடகங்கள் அதாஉல்லாஹ் அமைச்சரின் செல்வாக்கை குறைப்பதற்காக யாரினது தூண்டுதலின் பேரில் மேற்கொண்டிருந்தீர்கள்? 
அதாஉல்லாஹ் அரசியலில் மீடியா க்களுக்கு படம் காட்டி மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ததை விட ரகசியமான காய்நகர்தல்களின் மூலம் சாதித்து காட்டியவை ஆயிரமாயிரம்.

இன்று  இம்மக்களுக்கான இழப்பீட்டு தொகையான ரூபா இரண்டரை லட்சம் அதாஉல்லாஹ் அமைச்சரால் வழங்கப்பட்டது,

இந்த வீடுகள் தொடர்பில் அனைத்து வீடுகளையும் முஸ்லீகளுக்கு சொந்தமாக வேண்டுமென அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் களாக இருந்த சரத்வீரசேகர, தயாரத்ன போன்றோருடன் எத்தனை முறை அதாஉல்லாஹ் முரண்பட்டுக்கொண்டார்.

உங்களால் இனவாதமற்ற இன நல்லுறவுக்கு வித்திடும் நல்லாட்சி யில் உங்களுடைய நல்லாட்சி யின் பங்குதாரர்களாக இருக்கின்ற சம்பிக்க ரணவக்க தலைமையிலான JHUவுடனும் பேசி உண்மையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வீடுகளை பெறுவதற்கான நகர்வு ஒன்றையாயினும் ஒரு வருட காலத்தில் செய்ய முடிந்ததா?
மக்களை தூண்டி அதில் குளிர்காய்கின்ற அரசியலை விடுத்து மக்களுக்கான விடயங்களை செய்வதற்கு தயாராகுங்கள்

நல்லாட்சி உருவாகிய நீங்கள் முன்கொண்டு வைத்திருக்கும் எமது பிரச்சினைகளுக்காக நகர்வுகள் என்ன?
நல்லாட்சியை உருவாக்கினோம் என உரத்த குரலில் கூறும் நீங்கள் சாதித்தது என்ன?
“ஒன்றே ..அக்கரைப்பற்றிலே இருக்கும் பிராந்திய நீர்வழங்கல் காரியாலயத்தை இரண்டாக பிரித்து பெரும் பகுதியை வேறு பிரிவாக்கி பின்னர் அக்கரைப்பற்று காரியாலயத்தை உப பிராந்திய காரியாலயம் என மாற்றப்போகிறீர்கள்.”

அஸ்மி அப்துல் கபூர் 

முன்னாள் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர்