புதிய தேர்தல் கூட்டணியொன்றை உருவாக்க விமல் வீரவன்ச தரப்பு கடும் முயற்சி !

எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்குப் பதிலாக புதிய தேர்தல் கூட்டணியொன்றை உருவாக்க விமல் வீரவன்ச தரப்பு கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 

63435_vimal-weerawansha-2014

தற்போதைக்கு புதிய கூட்டணியில் சுமார் பத்து அரசியல் கட்சிகள் இணைந்து கொண்டுள்ளதாக விமல் வீரவன்சவின் கட்சி அறிவித்துள்ளது.

விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி கட்சியின் ஊடகத் தொடர்பாளர் முஸம்மில் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில் உதய கம்மன்பிலவின் பிவிதுரு ஹெலஉறுமய, தினேஷின் மக்கள் ஐக்கிய முன்னணி, வாசுதேவ கட்சி, டியூ குணசேகர கட்சி, நவ சிஹல உறுமய, திஸ்ஸ அத்தநாயக்கவின் கட்சி, போன்ற கட்சிகளே விமல் வீரவன்சவின் கூட்டணியில் இணைந்து கொள்ளவுள்ளன.

இவற்றோடு முன்னாள் பாதுகாப்புச்செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் ஆதரவுடன் தொடங்கப்படவுள்ள சிங்கலே எக்சத் பெரமுண என்ற கட்சியும் இவர்களுடன் இணைந்து கொள்ளவுள்ளது.

கூட்டணியின் தலைமைப் பதவி கோத்தபாய அல்லது விமல் வீரவனசவுக்கு வழங்கப்படவுள்ளது. இக்கூட்டணிக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கும் கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.