பிரித்தானியாவில் தொடர்ந்து பெய்துவரும் கன மழை காரணமாக மான்செஸ்டர் நகர் உள்ளிட்ட பல நகரங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.
பிரித்தானியாவில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கிறிஸ்துமஸ் தினமான நேற்று விடாமல் மழை பெய்தது.
அடுத்த நாள் காலை வரை தொடர்ந்த மழை காரணமாக ஏராளமான நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக வடக்கு பிரித்தானியாவில் உள்ள லங்கஷியர், யோர்க்ஷியர், மான்செஸ்டர் உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன.
இதனால் பிரித்தானியாவில் வானிலை ஆய்வு மையம் ஒரே நாளில் 2 முறை சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் 370க்கும் மேற்பட்ட வெள்ள எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
நேற்று ஒரு நாளில் மட்டும் 122 மில்லி மீற்றர் அளவு மழை பெய்ததாக கூறப்படுகிறது.
இது டிசம்பர் மாதம் முழுவதும் பெய்யவேண்டிய மழையின் அளவாகும். இந்த கன மழை காரணமாக வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
மான்சஸ்டர் நகரில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான கேளிகை விடுதி ஒன்றும் முற்றியில் நாசமானதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் மீட்பு படையினர் ஈடுபட்டுவருகின்றனர்.