கொழும்பின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.
கட்சியின் உட்பிரச்சினைக்கு இன்னும் தீர்வு ஏற்படாமையை அடுத்தே ஜனாதிபதி இதற்கான முடிவை எடுத்ததாக உயர் அரசியல் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவினர் உள்ளூராட்சி தேர்தலில் தனித்து போட்டியிட ஆயத்தங்களை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் இது கட்சியின் பிளவுக்கு வழிவகுக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னதாக தேர்தல் முறையில் மாற்றத்தை கொண்டு வருவதையும் ஜனாதிபதி நோக்காக கொண்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இவ்வாறிருக்க, உள்ளூராட்சி தேர்தல்கள் எதிர்வரும் புதுவருடத்துக்கு முன்னர் நடத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.