நைஜீரியாவில் சோகம் , 100க்கும் அதிகமானோர் கரிக்கட்டைகளாக கருகி உயிரிழந்தனர் !

நைஜீரியாவில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டு வரும் வேளையில் இங்குள்ள ஒரு எரிவாயு நிரப்பும் தொழிற்சாலையில்   டேங்கர் லாரி வெடித்து சிதறியதில் தீயில் சிக்கி நூற்றுக்கும் அதிகமானோர் கரிக்கட்டைகளாக கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

article-2173014-14097DD8000005DC-634_634x414

தென்கிழக்கு நைஜீரியாவில் உள்ள அனெம்ப்ரா மாநிலத்தின் நேவ்வி பகுதியில் கிறிஸ்தவ மக்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். இப்பகுதியில் சமையல் எரிவாயு நிரப்பித்தரும் தொழிற்சாலை ஒன்றுள்ளது. கிறிஸ்துமஸ் விழா களைகட்டிவரும் நிலையில் தங்கள் வீட்டு சமையல் தேவைக்கு ஏராளமான மக்கள் காலி சிலிண்டர்களில் எரிவாயு நிரப்புவதற்காக இங்கு வரிசையில் காத்திருந்தனர்.

c1cca38999b3e0
அப்போது, அங்கு எரிவாயுவை ஏற்றிவந்திருந்த ஒரு டேங்கர் லாரியில் கசிவு ஏற்பட்டதில் அங்கிருந்த எரிவாயு குழாய்கள் வெடித்துச் சிதறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த இடமே தீக்கோளமாக மாறியது. எரிவாயு நிரப்பிச் செல்ல காலி சிலிண்டர்களுடன் காத்திருந்த ஏராளமான மக்கள் பீதியில் மூலைக்கு ஒருவராக சிதறி ஓடினர். இருப்பினும், ராட்சத வேகத்தில் நாலாபுறமும் பரவிய தீயில் இருந்து அவர்களால் தப்பிச் செல்ல முடியவில்லை.

உடலில் தீப்பிடித்த நிலையில் ஏராளமான மக்கள் வேதனையால் கதறினர். சில நிமிடங்களுக்குள் அவர்களில் பலர் கரிக்கட்டைகளாக தரையில் விழுந்து உயிரிழந்தனர். நூற்றுக்கும் அதிகமான பிரேதங்கள் அங்கு காணப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ள நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியில் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர்.