மருதமுனை பி.எம்.எம்.ஏ.காதர்
தற்போதய அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் 1994ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி அம்பாறை நகரசபை வாடி வீடு கட்டத்தில் ‘அம்பாறை மாவட்ட கரையோர செய்தியாளர் சங்கம்’என்ற பெயரில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
அப்போது ஊடகவியலாளராகவும்,பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து பின்னர் பிரதி அமைச்சராகப் பதவிவகுத்து காலம் சென்ற எச்.எம்.வீரசிங்கவின் அனுசரணையில் சிரேஸ்ட ஊடகவியலாளரும் தற்போதய பிரதிக் கல்விப் பணிப்பாளருமான ஏ.எல்.எம்.முக்தார் தலைமையில் இந்த அங்குரார்ப்பணக் கூட்டம் நடைபெற்றது.
இந்த சங்கத்தை அங்குரார்ப்பணம் செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் இறக்காமத்தைச் சேர்ந்த சிரேஸ்ட ஊடகவியலாளர் எஸ்.எல்.எம்.பிக்கீர் மேற்கொண்டிருந்தார்.கூட்ட அழைப்புக் கடிதத்தையும் அவரே வீடு வீடாகச் சென்று வழங்கியிருந்தார் இந்தச் சங்கம் உருவாகுவதற்கு எஸ்.எல்.எம்.பிக்கீர் மூலகாரணியாவார்.
அன்றைய அங்குரார்ப்பண நிகழ்வில் நிந்தவூரைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம். ஏ.எல்.எம்.சலீம் ஸ்தாபகத் தலைவராத் தெரிவு செய்யப்பட்டார்.ஸ்தாபகச் செயலாளராக இறக்காமத்தைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எஸ்.எல்.எம்.பிக்கீPர் தெரிவானார்.ஸ்தாபகப் பொருளாளராக சாய்ந்தமருதைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ.எல்.எம்.ஜூனைதீன் தெரிவானார்.
மேலும் உறுப்பினர்களாக அப்போது ஊடகப்பணியில் இருந்த ஊடகவியலாளர்களான எம்.ஏ.பகுறுத்தீன், எம்.எல்.எம்.ஜமால்டீன், எம்.சஹாப்தீன்,மர்ஹூம்களான எம்.அஹமட்லெப்பை, ஏ.எம்.இப்றாகீம், ஐ.எல்.எம்.றிஸான் ஆகியோருடன் சிங்கள சகோதரர்களான வஸந்த சந்திரபால,ரவி,சமன்.திலக் அழகக்கோன் இன்னும் சிலரும் உறுப்பினர்களாக இணைந்தனர்.இந்த சங்கத்தை பதிவு செய்வதற்கு தலைவராகத் தெரிவு செய்யப்பட்ட ஏ.எல்.எம்.சலீம் மிகவும் பிரயத்தனம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பின்னர் இரண்டாவது பொதுக் கூட்டம் 1997.08.24ஆம் திகதி கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூ}ரி மண்டபத்தில் நடைபெற்றது இதில் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் எம்.ஏ.பகுறுடீன் தலைவராகத் தெரிவானார் செயலாளராக ஐ.எல்.எம்.றிஸான் பொருளாளராக ஐ.அப்துல் கரீம் ஆகியோர் தெரிவாகினார்கள்.
இதற்குப் பின்னர் மூன்றாவது பொதுக் கூட்டம் 1999.11.28ஆம் திகதி அட்டாளைச்சேனை மத்திய கல்லூரியில் நடைபெற்றது,இதில் தற்போதயத் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன் உறுப்பினர்களின் ஏகோபித்த ஆதரவுடன் சங்கத்தின் தலைமைப்பொறுப்பை ஏற்றார.அப்போது செயலாளராக ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்,பொருளாளராக பி.ரி.எம்.இக்பால் ஆகியோர் தெரிவாகினார்கள்.
தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் மீரா எஸ்.இஸ்ஸடீன் இன்று வரை தலைவராகக் கடமையாற்றவரகின்றார்.இவரது பதவிக்காலம் சங்கத்திற்கும் உறுப்பினர்களுக்கும் ஒரு பொற்காலமாகும்.இக்காலத்தில் ஊடகவியலாளர்கள் பலர் இணைந்து கொண்டனர்.ஒரு சிலர் பிரிந்தும் சென்றனர்.இருந்த போதிலும் தற்போது அதிக உறுப்பினர்கள் சங்கத்தில் இருக்கின்றனர்.
அதிக உறுப்பினர்களின் இணைவு காரணமாக ‘அம்பாறை மாவட்ட கரையோர செய்தியாளர் சங்கம்’ அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. மீரா எஸ்.இஸ்ஸடீன் தலைவராகப் பொறுப்பெற்ற பின்னர் உறுப்பினர்களின் நன்மை கருதி பல்வேறுபட்ட வேலைத் திட்டங்களை முன்னெடுத்துள்ளார்.
பயங்கரவாத கால கட்டத்தில் ஊடகவியலாளர் செய்தி சேகரிக்கச் செல்லம் போது பெரும் கஷ்டங்களையும்,சிக்கல்களையும் எதிர்நோக்க வேண்டியிருந்தது இக்கஷ்டங்களை உணர்ந்த தலைவர் மீரா எஸ்.இஸ்ஸடீன் அப்போது அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலீஸ் அத்தியட்சகராக இருந்த பிறையின் அமனுகம ஒப்பமிட்ட அடையாள அட்டைகளை சங்க உறுப்பினர்களுக்குப் பெற்றுக் கொடுத்தார்.
1999ஆம் ஆண்டு மறைந்த தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபை பிரதம அதிதியாகக் கொண்டு ஒலுவில் பிரதேசத்தில் உறுப்பினர்கள் சிலரை கௌரவித்தார்.அதேபோன்று 2000மாம் ஆண்டில் தெமட்டக்கொடையில் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரபை பிரதம அதிதியாகக் கொண்டு மற்றமொரு ஊடகவியலாளர் கௌரவிப்பைச் செய்தார்.2000-11-19ஆம் திகதி அக்கரைப்பற்றில் மற்றும் ஒரு கௌரவிப்பபையும.;
மேலும் 2001ஆம் ஆண்டு மறைந்த தலைவர் அஷ்ரபின் நினைவாக காவிய நாயகன் நூல் வெளியீடும், ஊடகவியலாளர் கௌரவிப்பும் தற்போதயத் தலைவர் றஊப் ஹக்கீமை பிரதம அதிதியாகக் கொண்டு மருதமுனை அல்மானார் மத்திய கல்லூரியில் நடாத்தினார்
2003ஆம் ஆண்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அப்போது ஊடக அமைச்சராக இருந்த இம்தியாஸ் பாக்கீர் மாக்காரை பிரதம அதிதியாகக் கொண்டு ஊடக நிறுவனங்களின் பிரதானிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் பலரையும் கௌரவித்து பொன்னாடை போர்த்தி பொற்கிளி,நினைவுச் சின்னம் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.
2004ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13ஆம் திகதி கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூயில் பொலீஸ் அதிகாரிகள் மற்றும் சமூக சேவையாளர் ஐந்து பேர் கௌரவிக்கப்பட்டனர்.
2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15ஆவது ஆண்டு நிறைவையொட்டி சங்க உறுப்பினர்களின் விபரங்கள் மற்றும் ஊடக நிறுவனங்களின் விபரங்கள் தொலைபேசி இலக்கங்கள் அடங்கிய மீடியா டிரக்டியும் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதே போன்று 2010ஆம் ஆண்டு ஜூலை மாதம்; 7ஆம் திகதி சம்மாந்துறையில் பெரும் பாராட்டு விழா ஒன்றையும் நடாத்தினார்.இதிலும் பல ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இவரது 16 வருட தலைமைப்பதவியில் 65க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
இதே போன்று சுனாமி அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு உதவிகளைப் பெற்றுக்கொடுத்ததில் கணிசமான பங்களிப்பைச் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.16 ஆண்டுகள் தொடர்ச்சியாக தலைவராக இருந்து சிறந்த பணியாற்றி வருகின்றமை இவரது ஆளுமையை வெளிக்காட்டுகின்றது.
இந்தச் சங்கத்தை உருவாக்க வேண்டும் என்ற உறுதியோடு நான் இருந்தேன் ஆனால் இந்தச் சங்கத்தை பிரபல்யப்படுத்திய பெருமை மீரா எஸ்.இஸ்ஸடீனையே சாரும் என ஸ்தாபகத் தலைவர் ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.
தற்போது செயலாளரக ரி.கே.றஹ்மத்துள்ளா.பொருளாளராக யு.எம்.இஸ்ஹாக் ஆகியோர் கடமையாற்றகின்றனர்.கடந்த காலங்களில் இச்சங்கத்தில் எம்.எஸ்.எம்.ஹனிபா, சிறிவேல்ராஜ், மர்ஹூம்களான ஏ.எம்.அலிகான்,ஏ.எம்.முஸம்மில்.மிஸ்கீன் ஹாஜியார், பி.எம்.எம்.ஏ.காதர், யூ.எல்.மப்றூக், எம்.எல்.எம்.ஜமால்டீன் உள்ளிட்ட பலர் பதவி நிலையில் பணியாற்றியுள்ளனர் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் உறுப்பினராக இணைந்து செயற்பட்டுள்ளனர். சிலர் உயிரிளந்துள்ளனர் சிலர் விலகிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் முஸ்லிம்.தமிழ்,சிங்கள ஊடகவியலாளர்களை ஒன்றிணைத்து இன நல்லுறவைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற நல்லெண்ணத்துடன் இவரது பணிகள் தொடர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இச் சம்மேளனத்தின் 20 ஆவது ஆண்டு நிறைவையொட்டிய மாநாடு இன்று 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 3.00 மணிக்கு நிந்தவூர் பிரதேச சபை கேட்போர் கூடத்தில் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம்,கலை வித்தகர் மீரா.எஸ்.இஸ்ஸடீன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில் பிரதம அதிதியாக நகர திட்டமிடல் நீர வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான றஊப் ஹக்கீம், கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
சிறப்பு அதிதிகளாக சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம்,விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி; எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர், அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம்.மன்சூர், ரவீந்திரன் கோடீஸ்வரன் மற்றும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகள்,உள்ளுராட்சி மன்றங்களின் பிரதானிகள் உள்ளீட்ட அரசியல் கட்சிகளின் முக்கியஸ்தர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்பொது சிரேஸ்ட,கனிஷ்ட ஊடகவியலாளர்கள் 24 பேர் கௌரவிக்கப்படவுள்ளனர் இவர்களின் விபரம்:-ஏ.எல்.ஜீனைதீன், பி.எம்.எம்.எ.காதர், ஐ.எல்.எம்.றிஸான், யு.எம்.இஸ்ஹாக்;,,நழீம் எம் பதுறுத்தீன், எம்.ஐ.எம்.வலீத், ஏ.எல்.எம்.முஜாஹித், ஏ.புவாத், எம்.பி.அஹமட்ஹாறூன், ரி.கே.றஹ்மத்துள்ளா, எம்.ஐ.அன்வர், ஏ.ஜே.எம்.ஹனீபா, ஜெஸ்மி எம் மூஸா, ஏ.எல்.றமீஸ், எம்.சி.அன்சார், எம்.ஐ.எம்.றியாஸ், எம்.ஏ.றமீஸ், எம்.எல்.சரிபுத்தீன், ஆர்.தில்லைநாதன், எஸ்.நடனசபேசன்,எஸ்.எம்.அறூஸ்,ஏ.கே.ஜஹ்பர்,எஸ்.எல்.அஸீஸ்;,ஜலீல் ஜீ ஆகியோரே கௌரவிக்கப்படவுள்ளனர்.
இந்தக் கட்டுரையில் இச்சங்கத்துடன் தொடர்புபட்டவர்கள் மற்றும் தகவல்கள் விடுபட்டிருந்தால் என்னோடு தொடர்பு கொள்ளவும் இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் திருத்திக் கொள்வதற்கு வாய்ப்பாகும்.