பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இரத்தினபுரியில் நேற்று முன்தினம் பொதுபல சேனா நடத்திய எழுவோம் தொனிப் பொருளிலான மாநாட்டில் உரையாற்றிய ஞானசார தேரர்,
ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது பெயரை குறிப்பிட்டு, தற்போது நாட்டை ஆள்வது ஓரின சேர்கையாளர்களின் அரசாங்கம் எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஞானசார தேரரின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள் சிலர், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கட்சியின் சட்டப்பிரிவினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரியவருகிறது.