வில்பத்து வனப்பகுதியை அழித்து அதில் முஸ்லிம் மக்களையும் குடியேற்றுவதோடு போதைப் பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர்,
தேசிய சங்க சம்மேளன பிக்குகளுடன் இது குறித்து விவாதிக்க தயார் எனவும், தனக்கும் சமுதாயத்திற்கும் எதிராக முன்வைக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதோடு இனவாதத்தை தூண்டுகின்ற வகையில் வெளியிடப்படுகின்ற கருத்துக்களுக்கு எதிராக முறைப்பாடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து நிரூபிக்க முடியாத பட்சத்தில் முஸ்லிம் சமூகத்திடம் தேசிய சங்க சம்மேளனத்தின் செயலாளர் ஆனந்த தேரர் மன்னிப்புக்கோர வேண்டும் எனவும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.