ஐ.டி.எப். டென்னிஸ் விருதுகள்: இரட்டையர் உலக சாம்பியனாக சானியா-ஹிங்கிஸ் ஜோடி தேர்வு!

சர்வதேச டென்னிசில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் (ஐ.டி.எப்.) சார்பில் உலக டென்னிஸ் சாம்பியன் விருது வழங்கி கவுரவிக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டில் பெண்கள் ஒற்றையரில் அமெரிக்க ‘நம்பர் ஒன்’ நட்சத்திரம் செரீனா வில்லியம்ஸ் உலக சாம்பியன் விருதுக்கு தேர்வாகியுள்ளார். 1978-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இந்த விருதை, செரீனா ருசிப்பது இது 6-வது முறையாகும். 

ஆண்கள் ஒற்றையரில் இந்த சீசனில் 3 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்ற ‘நம்பர் ஒன்’ வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா) தொடர்ந்து 5-வது முறையாக உலக சாம்பியன் விருதை வசப்படுத்தியுள்ளார். 

பெண்கள் இரட்டையரில் ‘நம்பர் ஒன்’ கூட்டணியான இந்தியாவின் சானியா மிர்சா- சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ங்கிஸ் ஜோடி இரட்டையர் உலக சாம்பியன் விருதை தட்டிச் சென்றுள்ளது. 
images
முதல்முறையாக இந்த விருதை பெறும் சானியா கூறுகையில்,

‘ஐ.டி.எப்.-யிடம் இருந்து பெறும் இந்த விருது எனக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம். நானும், ங்கிசும் கைகோர்த்த குறுகிய காலத்திலேயே நம்ப முடியாத அளவுக்கு சாதனைகளை (9 பட்டம்) படைத்துள்ளோம். எனது வாழ்க்கையில் உதவிகரமாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது வெற்றிகள், இந்தியாவில் உள்ள இளம் வீராங்கனைகளுக்கு உந்துசக்தியாக இருக்கும் என்று நம்புகிறேன்’ என்றார். 

ஐ.டி.எப். உலக சாம்பியன் விருதுகள், பாரீசில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் டென்னிசின் போது அளிக்கப்படும்.

0 0 votes
Article Rating
1 Comment
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments